Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
பூசணிக்காய் புளிக்குழம்பு
உங்களுக்கு மஞ்சள் பூசணிக்காய் பிடிக்குமானால், இதுவரை அதைக் கொண்டு பொரியல் மட்டும் தான் செய்துள்ளீர்கள் என்றால், இனிமேல் அதைக் கொண்டு அட்டகாசமான புளிக்குழம்பு செய்து சாப்பிடுங்கள்.
நீர்ச்சத்து அதிகம் நிறைந்த பூசணிக்காயை கோடைக்காலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்வதால், உடல் நீரேற்றத்துடன் ஆரோக்கியமாக இருக்கும். உங்களுக்கு மஞ்சள் பூசணிக்காய் பிடிக்குமானால், இதுவரை அதைக் கொண்டு பொரியல் மட்டும் தான் செய்துள்ளீர்கள் என்றால், இனிமேல் அதைக் கொண்டு அட்டகாசமான புளிக்குழம்பு செய்து சாப்பிடுங்கள். இது நிச்சயம் உங்களுக்கு பிடிக்குமாறு அற்புதமான சுவையுடன் இருக்கும். மேலும் இந்த புளிக்குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

கீழே பூசணிக்காய் புளிக்குழம்பு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* வெங்காய வடகம் - 6 துண்டு
* சின்ன வெங்காயம் - 10 (தோலுரித்துக் கொள்ளவும்)
* பூண்டு - 6 பல் (தோலுரித்துக் கொள்ளவும்)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* மஞ்சள் பூசணிக்காய் - 2 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* மல்லித் தூள் - 3 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* வெல்லம் - ஒரு சிறு துண்டு
* தண்ணீர் - தேவையான அளவு
* புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காய வடகத்தைப் போட்டு ஒரு நிமிடம் வறுக்கவும்.
* பின்னர் அதில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து 1-2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளி மற்றும் பூசணிக்காயை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் மல்லித் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் புளி நீர் சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி 10 நிமிடம் குறைவான தீயில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் வெல்லத்தை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பூசணிக்காய் புளிக்குழம்பு தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications