Latest Updates
-
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா?
இட்லி, தோசைக்கு வெறும் 2 நிமிஷத்துல அடுப்பே இல்லாம சட்னி செய்யணுமா? இந்த புளி மிளகாய் சட்னியை செய்யுங்க..
Puli Milagai Chutney Recipe In Tamil: காலையில் இட்லி தோசைக்கு இன்னும் சட்னி செய்யவில்லையா? இன்னும் ஒரே யோசனையில் தான் உள்ளீர்களா? ஆனால் நேரமாகிவிட்டதா? அப்படியானால் வெறும் 3 பொருள் கொண்டு 2 நிமிடத்தில் அடுப்பே இல்லாமல் சட்னி செய்யலாம். அது தான் புளி மிளகாய் சட்னி.
இந்த சட்னி அக்காலத்தில் கிராமத்து பகுதியில் அதிகம் செய்து சாப்பிடுவார்களாம். இந்த சட்னியின் ஸ்பெஷலே பச்சையாக சாப்பிடுவது தானாம். அதுவும் இதில் சேர்க்கும் நல்லெண்ணெய் இந்த சட்னிக்கு கூடுதல் சுவையை தரும். உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வித்தியாசமான சட்னியை செய்து கொடுக்க நினைத்தால், இந்த புளி மிளகாய் சட்னியை செய்யலாம்.

உங்களுக்கு புளி மிளகாய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புளி மிளகாய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வரமிளகாய் - 10
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - சிறிய எலுமிச்சை அளவு
* சின்ன வெங்காயம் - 15
* தண்ணீர் - சிறிது
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் 10 வரமிளகாயை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் சட்னியின் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வரமிளகாயை
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 சிறிய எலுமிச்சை அளவு புளி, 15 சின்ன வெங்காயத்தை
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி பரிமாறினால்,
சுவையான புளி மிளகாய் சட்னி தயார்.
* உங்களுக்கு ஒருவேளை பச்சை வாசனை பிடிக்காவிட்டால், இந்த சட்னியை
தாளிக்கலாம். அதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள்
ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், 1 டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு, 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,
சட்னியுடன் சேர்த்து கலந்து கொள்ளலாம். ஆனால் இந்த சட்னியை
தாளிக்காமல் சாப்பிட்டால் தான், சுவையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
