Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
1 கட்டு புதினா இருந்தா இந்த மாதிரி தொக்கு செஞ்சு பாருங்க...1 வாரம் இட்லி, தோசைக்கு சூப்பரா வைச்சு சாப்பிடலாம்!
Pudina Thokku Recipe in Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்யப் போகிறீர்களா? உடலுக்கு குளிர்ச்சியைத் தரும், அதே வேளையில் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஒரு சைடிஷ் செய்ய வேண்டுமா? வீட்டில் புதினா இருந்தால், அதைக் கொண்டு புதினா தொக்கு செய்யுங்கள்.
இந்த புதினா தொக்கு இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். இந்த புதினா தொக்கை சரியான் வழியில் சேமித்தால் ஒரு வாரம் வரை கூட வைத்து சாப்பிடலாம். முக்கியமாக இந்த தொக்கு குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு புதினா தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புதினா தொக்கின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- புதினா - 1 கட்டு
- புளி - சிறிதளவு
- பச்சை மிளகாய் - 3
- வர மிளகாய் - 2
- கடுகு - 1 ஸ்பூன்
- பூண்டு - 5 பல்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- புதினாவை நன்கு சுத்தம் செய்து ஆய்ந்து கொள்ளவும் கழுவி வைத்துக் கொள்ளவும்.
- இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் புதினாவுடன் பூண்டு, பச்சை மிளகாய் ஆகிய இவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
- புதினா நன்கு சுருளும் வரை வதக்கவும்.
- பின்னர் வர மிளகாய், உப்பு, புளி சேர்த்து சிறிது வதக்கி ஒரு மிக்சி ஜாரில் போட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய விடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகை போட்டு வெடிக்க விட்டு அரைத்த புதினா விழுதை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும்.
- நன்கு சுருள வந்தவுடன் இறக்கி ஆற வைத்து சுத்தமான பாட்டில்களில் பத்திரப்படுத்தவும்.
- சூப்பரான மற்றும் சுவையான புதினா தொக்கு தயார். இது இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
நன்மைகள்:
புதினாவில் இருக்கும் மென்தால் எண்ணெய் குளிர்காலங்களில் ஏற்படும் மூக்கடைப்பை குணப்படுத்துகிறது. மேலும் தொண்டை, நுரையீரல் போன்ற உறுப்புகளில் இருக்கும் அடைப்புகளை நீக்கி, சீரான சுவாசம் காற்று கிடைக்கும்படி செய்கிறது.



Click it and Unblock the Notifications