Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
1 கப் புதினா இருக்கா? அப்ப இந்த ஆந்திரா ஸ்டைல் புதினா தொக்கை செய்யுங்க... இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்...
Pudina Thokku Recipe in Tamil: இன்று உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்யப் போகிறீர்களா? அதற்கு சைடிஷாக வழக்கமான சட்னி செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமான அதே வேளையில் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஒரு சைடிஷ் செய்ய வேண்டுமா? வீட்டில் புதினா இருந்தால், அதை வைத்து ஆந்திரா ஸ்டைலில் புதினா தொக்கு செய்யுங்கள்.
இந்த ஆந்திரா ஸ்டைல் புதினா தொக்கு இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் வேற லெவல் சுவையில் இருக்கும். இந்த புதினா தொக்கை காற்றுப்புகாத பாத்திரத்தில் சேமித்து வைத்தால் ஒரு வாரம் வரை கூட வைத்து சாப்பிடலாம். முக்கியமாக இந்த தொக்கு குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் புதினா தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த புதினா தொக்கின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- 1 கப் புதினா இலைகள்
- 1 டேபிள் ஸ்பூன் புளிச்சாறு
- 10 சிவப்பு மிளகாய்
- 10 பல் பூண்டு
- 1 டீஸ்பூன் கொத்தமல்லி விதை
- 1 டீஸ்பூன் எள்
- ½ டீஸ்பூன் வெந்தயம்
- 2 டீஸ்பூன் சீரகம்
- தேவையான அளவு உப்பு
- 1 டீஸ்பூன் வெல்லம்
- 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- ½ டீஸ்பூன் கடுகு
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
செய்முறை:
- முதலில் ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, வெந்தயம், மிளகாய், கொத்தமல்லி, எள் சேர்த்து வதக்கவும். மிளகாய் சிவக்கும்படி வறுக்கவும்.
- பின்னர் சீரகம் சேர்த்து, அது வெடிக்கும் வரை வறுக்கவும். அவற்றை ஒரு தட்டிற்கு மாற்றி ஆற வைக்கவும்.
- பின்னர் அதே கடாயில் பூண்டு பல், புளி சேர்த்து, பூண்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும். இதையும் ஒரு தட்டில் எடுத்து ஆற வைக்கவும்.
- பின்னர் சுத்தம் செய்த புதினா இலைகளைச் சேர்த்து, அவை முழுதாக சுருங்கும் வரை சமைக்கவும். ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
- ஆறியதும், உப்பு, வெல்லம் சேர்த்து அரைக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். கெட்டியான விழுதாக அரைக்கவும்.
- மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி கடுகு சேர்த்து தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் அதில் ஒரு சிட்டிகை பெருங்காயத்தைச் சேர்க்கவும்.
- பின்னர் அரைத்த விழுதை இதனுடன் சேர்த்து தொக்கு ஒட்டும் தன்மையற்றதாக மாறும் வரை கிளறவும்.
- அவ்வளவுதான் சுவையான ஆந்திரா ஸ்டைல் புதினா தொக்கு ரெடி. இதை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடவும், இட்லி, தோசைக்கு சைடிஷாக வைத்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications