Latest Updates
-
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
புதினாவை வைச்சு இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க... உடம்புல இருக்குற பாதி பிரச்சினை காணாம போயிடும்...!
Pudina Rasam Recipe in Tamil: இந்திய உணவுகளில் குறிப்பாக தென்னிந்தியாவில் ரசத்திற்கு என்று எப்போதும் ஒரு தனியிடம் உண்டு. எவ்வ்ளவு பெரிய தடபுடலான விருந்தாக இருந்தாலும் கடைசியாக ரசத்துடன் முடித்ததால்தான் பெரும்பாலான மக்களுக்கு திருப்தியாக இருக்கும். ரசம் சுவையானதாக இருப்பதுடன் கடினமான உணவுகளை எளிதில் செரிமானம் அடையவும் வைக்கிறது. சொல்லப்போனால் ரசம் ஒரு மருந்துப் பொருளாகவே கருதப்படுகிறது. வயிறு சம்பந்தமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ரசம் சிறந்த தீர்வாக இருக்கிறது.
ரசத்தில் பல்வேறு வகைகள் உள்ளது. சில ஆரோக்கியமான பொருட்களை சேர்த்து தயாரிப்பதன் மூலம் ரசத்தை கூடுதல் சுவையாகவும், ஆரோக்கியமானதாகவும் மாற்றலாம். அப்படிப்பட்ட தனித்துவமான மற்றும் ஆரோக்கியமான ரசம்தான் புதினா ரசம். இந்த ரசம் செரிமானத்தை அதிகரிப்பது மட்டுமின்றி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இந்த பதிவில் ஆரோக்கியமான புதினா ரசத்தை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- ½ கப் புதினா இலைகள்
- ½ கப் புளிச்சாறு
- ½ கப் பருப்பு வேகவைத்த தண்ணீர்
- 1 தக்காளி
- 2 பச்சை மிளகாய் நறுக்கியது
- ¼ ஸ்பூன் மஞ்சள்
- 1 ஸ்பூன் ரசப்பொடி
- ¼ ஸ்பூன் பெருங்காயம்
- உப்பு தேவையான அளவு
தாளிக்க:
- 1 ஸ்பூன் நெய்
- ½ ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 சிட்டிகை பெருங்காயம்
செய்முறை:
- ரசம் வைக்கத் தொடங்குவதற்கு முன் ஒரு நெல்லிக்காய் அளவு புளியை ஊறவைத்து அரை கப் சாறு எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அதேபோல பருப்பு வேகவைத்த தண்ணீர் அரை கப்பை ரெடியாக வைத்துக் கொள்ளவும்.
- ரசத்தை தொடங்குவதற்கு முதலில் புளிச்சாறை ஒரு பாத்திரத்தில் ஊற்றவும்.
- அதில் ஒரு தக்காளியை கரைத்து விடவும் அல்லது நறுக்கிக் கூட சேர்க்கலாம்.
- அரை கப் புதினா இலைகளை தண்ணீரில் நன்றாக அலசி விட்டு மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த புதினாவை பாத்திரத்தில் உள்ள புளிச்சாறுடன் கலக்கவும்.
- பின்னர் மஞ்சள் தூள், ரசப் பொடி, பெருங்காயம் மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்க்கவும்.
- பின்னர் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான தீயில் கலக்கவும்.
- ரசம் கொதித்து நுரை வந்ததும் அதில் பருப்புத் தண்ணீரை சேர்க்கவும்.
- பின்னர் தேவையான அளவு உப்பு மற்றும் நறுக்கிய இரண்டு துண்டு தக்காளி சேர்த்து நன்கு கலக்கவும் .
- இது நன்கு கொதித்து நுரை வரும்வரை மிதமான தீயில் கொதிக்க விடவும்.
- நுரை வந்ததும் அடுப்பை அணைத்து பாத்திரத்தை இறக்கி வைத்து விடவும்.
- பின்னர் ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் நெய்யைச் சூடாக்கி, கடுகு, பெருங்காயம் மற்றும் சீரகம் சேர்த்து தாளித்து ரசத்தின் மீது ஊற்றி நன்கு கலக்கவும்.
- இறுதியாக சிறிது பொடியாக நறுக்கிய புதினா இலைகளை சேர்த்தால் சூப்பரான மற்றும் ஆரோக்கியமான புதினா ரசம் ரெடி!



Click it and Unblock the Notifications