Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
புதினா சட்னியை இந்த மாதிரி ஒரு தடவை அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...!
Pudina Onion Chutney Recipe in Tamil: பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் இட்லி, தோசை சாப்பிடும் பழக்கம் இருக்கும். உங்கள் வீட்டில் இன்று இட்லி அல்லது தோசை செய்ய போகிறீர்களா? இட்லி, தோசை செய்வது எளிதானதாக இருந்தாலும் அதற்கு என்ன சைடிஷ் செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். பொதுவாக இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி அல்லது கார சட்னிதான் முக்கியமான சைடிஷாக இருக்கும்.
ஆனால் புதினா சட்னியும் இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷாக இருக்கும். புதினா சட்னி சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட. அடுத்த முறை புதினா சட்னி அரைக்கும் போது வழக்கமான சட்னியாக அரைக்காதீர்கள். தேங்காய் சேர்க்காமல் தயாரிக்கப்படும் இந்த புதினா வெங்காய சட்னி, இட்லி, தோசை மற்றும் சப்பாத்திக்கு அருமையான சைடிஷாக இருக்கும். வழக்கமான புதினா சட்னியில் புதிதாக சேர்க்கப்படும் சில பொருட்கள் அதன் சுவையை பலமடங்கு அதிகரிக்கும்.
உங்களுக்கு வித்தியாசமான வெங்காய புதினா சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காய புதினா சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையானப் பொருட்கள்:
- புதினா இலைகள் - 1 கப்
- சின் வெங்காயம் - 1 கப்
- வர மிளகாய் - 5
- உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
- பொட்டுக்கடலை - 1 ஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - 1/4 ஸ்பூன்
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் வர மிளகாய், 1 ஸ்பூன் உளுந்தம் பருப்பு மற்றும் 1 ஸ்பூன் பொட்டுக்கடலை சேர்த்து வதக்கவும்.
- பருப்பு பொன்னிறமாக மாறியதும் அதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி ஆற வைக்கவும்.
- பின்னர் அதே கடாயில் உரித்த சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
- பின்னர் புதினாவை சேர்த்து சுருளும் வரை வதக்க வேண்டும்.
- பின்னர் உப்பு மற்றும் பெருங்காயத்தை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- வெங்காயத்தின் வெப்பத்திலேயே அனைத்தும் வேக வேண்டும்.
- இதை நன்றாக ஆற வைக்கவும்.
- இந்த கலவை நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொரகொரப்பான சட்னியாக அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி வைக்கவும்.
- ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு போட்டு பொரிய விடவும்.
- கடுகு பொரிந்ததும் உளுந்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும். இறுதியாக இதை சட்னி மீது கொட்டி கிளறினால் தேங்காய் சேர்க்காத சூப்பரான வெங்காய புதினா சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications