Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
அரை கப் புதினாவுடன் இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க... எவ்வளவு தோசை சுட்டாலும் பத்தாது...!
Pudina Chutney Recipe in Tamil: பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் இட்லி, தோசை சாப்பிடும் பழக்கம் இருக்கும். உங்கள் வீட்டில் இன்று இட்லி அல்லது தோசை செய்ய போகிறீர்களா? இட்லி, தோசை செய்வது எளிதானதாக இருந்தாலும் அதற்கு என்ன சைடிஷ் செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். பொதுவாக இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி அல்லது கார சட்னிதான் முக்கியமான சைடிஷாக இருக்கும்.
சில அரிதான சந்தர்ப்பங்களில் புதினா சட்னியை வீட்டில் செய்வார்கள். அப்படி புதினா சட்னி செய்யும் போது அதனுடன் சில பொருட்களை சேர்த்து சட்னி அரைப்பது அதன் சுவையை பலமடங்கு உயர்த்தும். அப்படி புதினா சட்னியின் சுவையை உயர்த்தும் சில பொருட்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த பொருட்களை வைத்து சட்னி அரைத்து இட்லியுடன் பரிமாறும்போது அனைவரும் வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள். இந்த பதிவில் புதினா சட்னியை சுவை உயர்த்த சேர்க்க வேண்டிய பொருட்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- கால் கப் புதினா
- கால் கப் கறிவேப்பிலை
- கால் கப் புதினா
- 8 வர மிளகாய்
- 2 ஸ்பூன் பொட்டுக்கடலை
- 1 ஸ்பூன் உளுந்தம் பருப்பு
- புளி சிறிதளவு
- 1 ஸ்பூன் வெல்லம்
- பெருங்காயம் ஒரு சிட்டிகை
- அரை ஸ்பூன் கடுகு
- 2 ஸ்பூன் தேங்காய்
- 2 ஸ்பூன் எண்ணெய்
- உப்பு தேவையான அளவு
செய்முறை:
- கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை நன்றாக கழுவி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு கடாயில் 1 ஸ்பூன் கடுகைப் போட்டு நன்கு பொரிந்ததும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம்பருப்பு, பொட்டுக்கடலை மற்றும் சிவப்பு மிளகாய் ஆகியவற்றை பெருங்காயத்துடன் சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். இவற்றை ஒரு தட்டுக்கு மாற்றி மிதமான தீயில் ஆற விடவும்.
- பின்னர் ஊறவைத்த இலைகளை எடுத்து அதிகப்படியான தண்ணீரை பிழிந்து விட்டு, கடாயில் சேர்த்து, அது சுருங்கும் வரை வதக்கவும்.
- பின்னர் மிக்ஸி ஜாரில் வறுத்த மிளகாய், பொட்டுக்கடலை, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றுடன் புளி, உப்பு, வெல்லம் மற்றும் தேங்காய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் வதக்கிய இலைகள் மற்றும் கடுகு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- பின்னர் இரண்டையும் ஒரே பாத்திரத்தில் கொட்டி நன்றாக கலந்து விடவும்.
- இந்த சட்னிக்கு தாளிப்பு தேவை இல்லை, உங்களுக்கு தேவைப்பட்டால் கடுகு, கடலைப்பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ளலாம்.
- சூப்பரான புதினா சட்னி ரெடி. இது இட்லி, தோசையுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications