Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வரகரிசியும், வாழைப்பழமும் இருந்தா இந்த ஆரோக்கியமான பணியாரத்தை செய்யுங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
பார்லர் போகாமலேயே முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? இந்த 5 ஃபேஸ் பேக்கை போடுங்க போதும்..
புடலங்காயை ஒருமுறை இந்த மாதிரி செய்யுங்க.. கிலோ கணக்குல செஞ்சாலும் காலியாயிடும்...
Pudalangai Peanut Poriyal Recipe In Tamil: உங்கள் வீட்டில் புடலங்காய் உள்ளதா? பொதுவாக புடலங்காயைக் கொண்டு கூட்டு, பொரியல் என்று செய்வோம். ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு புடலங்காய் சாப்பிட பிடிக்காதா? ஆனால் புடலங்காயைக் கொண்டு பொரியல் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் அந்த பொரியலுடன் வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளுங்கள்.
இப்படி புடலங்காயுடன் வேர்க்கடலையை சேர்த்து செய்யும் போது அட்டகாசமான சுவையில் இருக்கும். முக்கியமாக இந்த மாதிரியான புடலங்காய் பொரியலை செய்தால், யாருமே பிடிக்காது என்று சொல்லமாட்டார்கள். மேலும் கிலோ கணக்கில் செய்தாலும் சாப்பிட்டுவிடுவார்கள். மேலும் இந்த பொரியலானது சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் போன்றவற்றுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு வேர்க்கடலை பயன்படுத்தி புடலங்காய் பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை பயன்படுத்தி செய்யக்கூடிய புடலங்காய் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புடலங்காய் - 1/2 கிலோ
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
வறுத்து அரைப்பதற்கு...
* வேர்க்கடலை - 1/2 கப்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பூண்டு - 4 பல்
* தேங்காய் - 4 துண்டு
செய்முறை:
* முதலில் புடலங்காயை கல் உப்பு சேர்த்து தேய்த்து கழுவிக் கொள்ள
வேண்டும். பின் அதை பொடியாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலை, கடலைப்
பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் மிளகு, சீரகம், வரமிளகாய், பூண்டு மற்றும் தேங்காய்
சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின்பு வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரவென்று
அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், கடுகு, உளுத்தம் பருப்பு,
கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கி வைத்துள்ள புடலங்காயை சேர்த்து சுவைக்கேற்ப
உப்பு தூவி, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி
விட்டு, மூடி வைத்து ஒரு 4 நிமிடம் புடலங்காயை வேக வைக்க
வேண்டும்.
* 4 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, அதில் அரைத்து வைத்துள்ள
பொடியை சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி இறக்கினால், சுவையான
புடலங்காய் வேர்க்கடலை பொரியல் தயார்.
Image Courtesy: South Indian Food



Click it and Unblock the Notifications