Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
இதுவரை புடலங்காய் சட்னி செஞ்சிருக்கீங்களா? இல்லன்னா இன்னிக்கு ட்ரை பண்ணுங்க...
Pudalangai Chutney Recipe In Tamil: இன்று காலை உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்ய போகிறீர்களா? அதற்கு என்ன சட்னி அரைப்பதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் புடலங்காய் உள்ளதா? இதுவரை நீங்கள் புடலங்காயைக் கொண்டு கூட்டு, பொரியல் தான் செய்திருப்பீர்கள்.
ஆனால் அதைக் கொண்டு அருமையான சுவையில் சட்னி செய்யலாம் என்பது தெரியுமா? இந்த சட்னி இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

உங்களுக்கு புடலங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புடலங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புடலங்காய் - 1/2 கப் (நறுக்கியது)
* வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது)
* பூண்டு - 2 பல்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 3-4
* புளி - ஒரு சிறிய துண்டு
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - ஒரு கையளவு
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் புடலங்காயை நன்கு கழுவி துண்டுகளாக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக
வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நிறம் மாறும் வரை
வதக்க வேண்டும்.
* பிறகு புடலங்காயை சேர்த்து 5 நிமிடம் நன்கு மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின் ஒரு கையளவு கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் புளி
மற்றும் சிறிது நீரை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான புடலங்காய் சட்னி
தயார்.
Image Courtesy: namscorner



Click it and Unblock the Notifications