Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
காரசாரமான... இறால் பெப்பர் ப்ரை
Prawn Pepper Fry: நீங்கள் இறால் பிரியரா? அடிக்கடி இறால் வாங்கி சமைத்து சாப்பிடுவீர்களா? இதுவரை நீங்கள் உங்கள் வீட்டில் இறால் பெப்பர் ப்ரை செய்துள்ளீர்களா? இல்லையென்றால் அடுத்தமுறை இறாலை வாங்கினால், அதைக் கொண்டு இறால் பெப்பர் ப்ரை செய்து சாப்பிடுங்கள்.
இறால் பெப்பர் ப்ரை செய்வது மிகவும் சுலபம். இது ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு இறால் பெப்பர் ப்ரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இறால் பெப்பர் ப்ரை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* இறால் - 20
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
வதக்குவதற்கு...
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
* கறிவேப்பிலை - சிறிது
* குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
* பின் கழுவிய இறாலை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் ஊற
வைப்பதற்கு கொடுத்துள்ள மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு
பேஸ்ட், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிரட்டி தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், இறால் துண்டுகளைப் போட்டு ஒரு நிமிடம் ப்ரை
செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே எண்ணெயில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பலை
சேர்த்து, சிறிது உப்பு தூவி ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின் அதில் குடைமிளகாயை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து, அதில் ப்ரை செய்து வைத்துள்ள இறாலை சேர்த்து நன்கு கிளறி,
கரம் மசாலாவைத் தூவி கிளறி, மூடி வைத்து 4-5 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* அதன் பின் மூடியைத் திறந்து, மேலே மிளகுத் தூள் மற்றும்
கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான இறால் பெப்பர் ப்ரை
தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications











