Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
ருசியான... உருளைக்கிழங்கு ரோஸ்ட்
உங்கள் வீட்டில் உள்ளோர் உருளைக்கிழங்கை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு எளிமையான ஒரு சைடு டிஷ் செய்யலாம். அது தான் உருளைக்கிழங்கு ரோஸ்ட்.
மதியம் சாதத்திற்கு சைடு டிஷ் என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் உருளைக்கிழங்கு பிரியரா? உங்கள் வீட்டில் உள்ளோர் உருளைக்கிழங்கை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு எளிமையான ஒரு சைடு டிஷ் செய்யலாம். அது தான் உருளைக்கிழங்கு ரோஸ்ட். இது சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு உருளைக்கிழங்கு ரோஸ்ட் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு ரோஸ்ட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உருளைக்கிழங்கு - 4
* இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி -சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, உருளைக்கிழங்கு மூழ்கும் வரை நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கின் தோலுரித்து, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்குடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, ஒரு டீஸ்பூன் நீரை ஊற்றி நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சோம்பு சேர்த்து தாளித்து, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பிறகு பிரட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் 5-7 நிமிடம் நன்கு ரோஸ்ட்டாகும் வரை கிளறி விட வேண்டும். முக்கியமாக கருகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
* அதன் பின் மேலே கொத்தமல்லியைத் தூவி அடுப்பை அணைத்தால், சுவையான உருளைக்கிழங்கு ரோஸ்ட் தயார்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications