Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
3 உருளைக்கிழங்கும், 1 வெங்காயமும் இருந்தா.. ஈவ்னிங் இந்த புதுமையான ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
Potato Onion Bonda Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு அருமையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கும், வெங்காயமும் உள்ளதா? அப்படியானால் அவ்விரண்டையும் கொண்டு அருமையான சுவையில் போண்டா செய்து கொடுங்கள்.
அதுவும் இந்த போண்டாவை வழக்கமாக செய்வது போன்று செய்யாமல், ஒருமுறை இந்த பக்குவத்தில் செய்யுங்கள். இப்படி போண்டா செய்யும் போது, உங்கள் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவதோடு, அவர்களின் பசியும் அடங்கும். முக்கியமாக இந்த போண்டா வித்தியாசமான தோற்றத்தில் இருப்பதால், குழந்தைகள் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு உருளைக்கிழங்கு வெங்காய போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு வெங்காய போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* இஞ்சி - 2 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* முட்டைக்கோஸ் - 100 கிராம் (நீளவாக்கில் நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)
* மல்லி - 1 டீஸ்பூன் (பொடித்தது)
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உருளைக்கிழங்கு - 3 (சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள
வேண்டும்)
* கடலை மாவு - 75 கிராம்
* பச்சரிசி மாவு - 50 கிராம்
* தண்ணீர் - சிறிது
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு,
பச்சை மிளகாயை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் மெல்லிதாக நீளவாக்கில் நறுக்கிய முட்டைக்கோஸ் மற்றும்
வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடித்த மல்லி, சீரகம், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
பின் நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயத் தூள், மிளகாய்
தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் சற்று சதுரத் துண்டுகளாக வெட்டிய உருளைக்கிழங்கை
சேர்த்து கைகளால் நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் கடலை மாவு, பச்சரிசி மாவு சேர்த்து, சிறிது நீரைத்
தெளித்து நன்கு பிரட்டி விட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ளதை கொஞ்சம் எடுத்து
உருட்டி, தட்டி எண்ணெயில் போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக
பொரித்து எடுத்தால், சுவையான உருளைக்கிழங்கு வெங்காய போண்டா தயார்.
இதேப்போன்று மீதமுள்ளதையும் தட்டிப் போட்டு பொரித்து எடுக்க
வேண்டும்.



Click it and Unblock the Notifications