Latest Updates
-
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம்
எப்பவும் வெறும் சப்பாத்தியை செய்யாம.. ஒருமுறை இப்படி சப்பாத்தி செஞ்சு சாப்பிட்டு பாருங்க...
Potato Masala Chapati Recipe In Tamil: நீங்கள் உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தியை செய்வீர்களா? அதுவும் எப்போதும் வெறும் சப்பாத்தியை தான் செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை சற்று வித்தியாசமாக உருளைக்கிழங்கைக் கொண்டு சப்பாத்தியை செய்யுங்கள்.
இந்த உருளைக்கிழங்கு சப்பாத்தி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, மிகவும் சுவையாகவும், மென்மையாகவும் இருக்கும். முக்கியமாக இந்த சப்பாத்திக்கு சைடு டிஷ் எதுவுமே தேவைப்படாது. அந்த அளவில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்தது)
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 3/4 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* நெய் - 2 டீஸ்பூன்
* கடலை மாவு - 3 டீஸ்பூன்
* கோதுமை மாவு - 2 கப்
* நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கை எடுத்துக்
கொண்டு, கைகளால் கட்டிகள் இல்லாதவாறு நன்கு பிசைந்து மசித்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் மல்லித் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு நெய் சேர்த்து நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பின்பு அதில் கடலை மாவை சேர்த்து, பின் கோதுமை மாவை கொஞ்சம்
கொஞ்சமாக சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள
வேண்டும். பின் அதில் நெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
இந்த சப்பாத்திக்கு மாவு பிசையும் போது நீர் எதுவும்
சேர்க்கக்கூடாது.
* மாவை நன்கு பிசைந்த பின், அந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து
உருண்டைகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு உருண்டையை எடுத்து, சப்பாத்தி போன்று தேய்க்க வேண்டும்.
அப்படி தேய்க்கும் போது அதிக அழுத்தம் கொடுத்து தேய்க்காமல்,
மென்மையாக தேய்க்க வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில்
தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை ஒவ்வொன்றாக சேர்த்து எண்ணெய்/நெய்
ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான
உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications