Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
வீட்ல உருளைக்கிழங்கு இருக்கா? அப்ப இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சு குடுங்க... எல்லாரும் அசந்துருவாங்க...!
Potato Manchurian Recipe in Tamil: பெரும்பாலான மக்களுக்கு பிடித்த ஒரு பாஸ்ட் புட் என்றாலே அது மஞ்சூரியன்தான். மஞ்சூரியன் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவ்து கோபி மஞ்சூரியன்தான். ஆனால் இதனை காலிபிளவர் வைத்து மட்டும்தான் செய்ய வேண்டுமென்று இல்லை. வீட்டில் உள்ள மற்ற காய்கறிகளை வைத்தும் இதனை செய்யலாம்.
அனைவருக்கும் பிடித்த அனைத்து வீடுகளிலும் இருக்கும் ஒரு காய்கறி என்றால் அது உருளைக்கிழங்குதான். உருளைக்கிழங்கை வைத்து மஞ்சூரியன் செய்யும் போது அது அனைவருக்கும் பிடித்த உணவாக இருக்கும். இந்த பதிவில் உருளைக்கிழங்கை வைத்து எப்படி மஞ்சூரியன் எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
மாவுக்கு தேவையானப் பொருட்கள்:
- 2 உருளைக்கிழங்கு
- 3 ஸ்பூன் கார்ன்ஃப்ளார்
- 2 ஸ்பூன் மைதா
- 1 ஸ்பூன் மிளகு தூள்
- 1 ஸ்பூன் பூண்டு விழுது
- 1 ஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள்
- உப்பு தேவைக்கேற்ப
- எண்ணெய் தேவையான அளவு
மஞ்சூரியன் மசாலாவுக்கு தேவையானப் பொருட்கள்:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் நறுக்கிய இஞ்சி பூண்டு விழுது
- 1/4 கப் பெரிய நறுக்கிய வெங்காயம்
- 1/2 கப் கேப்சிகம் க்யூப்
- 1/4 ஸ்பூன் சோயா சாஸ்
- 1/2 ஸ்பூன் சிவப்பு மிளகாய் சாஸ்
- 1 ஸ்பூன் தக்காளி சாஸ்
- 1/4 ஸ்பூன் மிளகு தூள்
- 1/2 ஸ்பூன் வினிகர்
- உப்பு தேவையான அளவு
- 1 டீஸ்பூன் கார்ன்ஃப்ளார்
- தண்ணீர் தேவையான அளவு
செய்முறை:
- உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு 1 ஸ்பூன் உப்பு சேர்த்து 3
விசில் வரை வேகவைக்கவும். உருளைக்கிழங்கு வெந்தவுடன் தோலை உரித்து
தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு சிறிய கிண்ணத்தில் சோள மாவை எடுத்து அதனுடன் தண்ணீர் சேர்த்து
பேஸ்ட் செய்து தனியாக வைக்கவும்.
- மற்றொரு கிண்ணத்தில் மாவு தயாரிக்க பட்டியலிடப்பட்டுள்ள பொருட்களை
சேர்க்கவும். தண்ணீர் கொஞ்சமாக சேர்த்து கொஞ்சம் கெட்டியான பேஸ்ட்டை
உருவாக்கவும்.
- உருளைக்கிழங்கை பாதியாக நறுக்கி, மாவுடன் சேர்த்து நன்றாகக்
கலக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி உருளைக்கிழங்கை வறுத்து தனியாக
எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு
சேர்த்து, வெங்காயத்தை சேர்க்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும், பின்னர் குடைமிளகாய்
சேர்த்துக்கு வதக்கவும்.
- பின்னர் சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ், உப்பு மற்றும் மிளகு
சேர்க்கவும்.
- இவற்றை பச்சை வாசனை போனவுடன் அதில் சோள மாவு கரைசலை ஊற்றிக்
கிளறவும்.
- ஒரு நிமிடம் கொதிக்க விடவும், பின்னர் வினிகர் சேர்க்கவும். 2
நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- பின்னர் வறுத்த உருளைக்கிழங்கு சேர்த்து கிளறவும். நன்கு வதக்கிய
பின் சிறிதளவு பச்சை வெங்காயம் போட்டு அடுப்பை அணைக்கவும்.
- சுவையான உருளைக்கிழங்கு மஞ்சூரியன் ரெடி!



Click it and Unblock the Notifications
