Latest Updates
-
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
1 உருளைக்கிழங்கு இருந்தா போதும்... இட்லி, தோசைக்கு இந்த அட்டகாசமான சைடிஷ டக்குனு செய்யலாம்... செஞ்சு பாருங்க..
Potato Kurma Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் காலையில் இட்லி, தோசை தான் செய்வார்கள்? அந்த இட்லி, தோசைக்கு எப்போதும் சட்னி, சாம்பார்தான் பிரதான சைடிஷாக இருக்கும். இட்லி, தோசைக்கு வழக்கமான சட்னி இல்லாமல் சற்று வித்தியாசமாக அதே சமயம் வீட்டில் உள்ளோர் விரும்பி சாப்பிடக் கூடிய ஒரு சைடிஷ் செய்ய விரும்புகிறீர்களா?
அப்படியானால் இந்த உருளைக்கிழங்கு குருமாவை செய்யுங்கள். அதுவும் நீங்கள் வழக்கமாக செய்வது போன்று செய்யாமல், இந்த குருமாவிற்கென ஒரு தனி மசாலா அரைத்து செய்யப்படுவதால் இதன் சுவை மிகவும் வித்தியாசமாகவும், அற்புதமாகவும் இருக்கும். இது குருமா சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிடவும் மிகவும் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு ஸ்பெஷல் உருளைக்கிழங்கு குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஸ்பெஷல் உருளைக்கிழங்கு குருமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 உருளைக்கிழங்கு
- 1 பெரிய வெங்காயம்
- ½ தக்காளி
- 3 டீஸ்பூன் எண்ணெய்
- ½ டீஸ்பூன் கடுகு
- ஒரு கொத்து கறிவேப்பிலை
- ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவையான அளவு உப்பு
- ஒரு கைப்பிடி கொத்தமல்லி
- தேவையான அளவு தண்ணீர்
அரைக்க:
- 5 முந்திரி பருப்பு
- 1 டீஸ்பூன் பொட்டுகடலை
- 1 பச்சை மிளகாய்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- 1 ஸ்பூன் சோம்பு
- ½ ஸ்பூன் கல்பாசி
- அரை தக்காளி
- 4 பல் பூண்டு
- 3 டீஸ்பூன் தேங்காய்
செய்முறை:
- முதலில் ஒரு உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து வைத்து வைத்துக் கொள்ளவும்.
- முதலில் முந்திரிப் பருப்பு, பொட்டுக்கடலை, மிளகாய்த்தூள், பச்சை மிளகாய், தக்காளி, தேங்காய், சோம்பு மற்றும் கல்பாசி ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் 4 பல் பூண்டும், தேவையான அளவு தண்ணீரும் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு வெடித்ததும் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
- இப்போது பொடியாக நறுக்கிய தக்காளியை இதனுடன் சேர்த்து, அது குழையும் வரை வதக்கவும்.
- தக்காளி குழைந்ததும் அரைத்து வைத்த விழுதை இதனுடன் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.
- மசாலா கொதிக்கும் போது பின்னர் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கைச் சேர்க்கவும்.(உருளைக்கிழங்கு இல்லாமலும் இந்த குருமாவை செய்யலாம்)
- இப்போது மேலும் 1 கப் தண்ணீர் சேர்க்கவும், ஏனெனில் குருமா ஆறியதும் கெட்டியாகி விடும். எனவே உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- குருமா நன்கு கொதித்து வாசனை வந்ததும் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்தால் சுவையான உருளைக்கிழங்கு குருமா ரெடி.
- இதை சூடான இட்லி, தோசையுடன் பரிமாறினால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.



Click it and Unblock the Notifications











