Latest Updates
-
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
பூரிக்கு உருளைக்கிழங்கு வெச்சு.. இப்படி கிரேவி செய்யுங்க.. மட்டன் கிரேவியே தோத்துடும்...
Potato Gravy For Poori In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பூரி செய்யப் போகிறீர்களா? அந்த பூரிக்கு வெஜ் சைடு டிஷ் தான் செய்ய போகிறீர்களா? அதுவும் உருளைக்கிழங்கு கொண்டு தான் சைடு டிஷ் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் உருளைக்கிழங்கைக் கொண்டு வழக்கமாக செய்வது போன்று மசாலா அல்லது குருமா செய்யாமல், கிரேவி செய்யுங்கள்.
இந்த உருளைக்கிழங்கு கிரேவிக்கு தக்காளி எதுவும் தேவையில்லை, உருளைக்கிழங்கு, வெங்காயம், தயிர் இருந்தால் போதும். இந்த பக்குவத்தில் உருளைக்கிழங்கு கிரேவி செய்தால், மட்டன் கிரேவியே தோற்றுப்போகும் அளவில் ருசியாக இருக்கும். முக்கியமாக இது பூரியுடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு உருளைக்கிழங்கு கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* உருளைக்கிழங்கு - 4 அல்லது 1/2 கிலோ
* தண்ணீர் - தேவையான அளவு
கிரேவிக்கு...
* எண்ணெய் - 2 ஸ்பூன் + 2 ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/2 டம்ளர் + 3/4 லிட்டர்
* தயிர் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கை நன்கு கழுவி, இரு துண்டுகளாக்கி
குக்கரில் போட்டு, கிழங்கு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி அடுப்பில்
வைத்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதன் தோலை நீக்கிவிட்டு, சிறு
துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், உருளைக்கிழங்கை சேர்த்து 2 நிமிடம் ப்ரை செய்து, ஒரு
தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை,
கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து
ஒருமுறை கிளறி, 1/2 டம்ளர் நீரை ஊற்றி நன்கு பச்சை வாசனை போக 3
நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் தயிரை நன்கு அடித்து சேர்த்து, அதோடு 3/4 லிட்டர்
நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கொதி வந்ததும், ப்ரை செய்து
வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து, 5 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து
இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான உருளைக்கிழங்கு கிரேவி
தயார்.



Click it and Unblock the Notifications
