Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
பூரிக்கு எப்பவும் ஒரே மாதிரி உருளைக்கிழங்கு கிரேவி செய்யாம.. ஒருவாட்டி இப்படி செய்யுங்க.. டேஸ்ட் அள்ளும்..
Green Potato Gravy Recipe In Tamil: லீவு நாட்களில் தான் நமக்கு பிடித்த உணவுகளை சமைத்து, பொறுமையாக ரசித்து ருசித்து சாப்பிட முடியும். இந்த வார விடுமுறை நாளில் நீங்கள் பூரி செய்வதாக இருந்தால், அதற்கு சைடு டிஷ்ஷாக உருளைக்கிழங்கு கிரேவி செய்வீர்களா?
அப்படியானால் ஒரே மாதிரியான சுவையில் கிரேவியை செய்யாமல், ஒருமுறை புதினா கொத்தமல்லியை அரைத்து சேர்த்து, கிரேவி செய்யுங்கள். இப்படி செய்யும் கிரேவியானது வழக்கமாக செய்யும் கிரேவியின் சுவையின் இருந்து வேறுபட்டிருக்கும். அதோடு இந்த கிரேவியை செய்தால், வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடவும் செய்வார்கள்.

உங்களுக்கு க்ரீன் உருளைக்கிழங்கு கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே க்ரீன் உருளைக்கிழங்கு கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தண்ணீர் - 4 கப்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* உருளைக்கிழங்கு - 2 (தோலுரித்து சற்று பெரிய
துண்டுகளாக்கப்பட்டது)
அரைப்பதற்கு...
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* புதினா - 7-8 இலைகள்
* பச்சை மிளகாய் - 6
* பூண்டு - 4 பல்
* இஞ்சி - சிறிய துண்டு
* வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 கப்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 4 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து,
அதில் துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கை சேர்த்து, அத்துடன் 1/2
டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, உருளைக்கிழங்கை முக்கால்வாசி வேக
வைத்து இறக்கி, தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், பூண்டு,
இஞ்சி, வறுத்த வேர்க்கடலை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த மசாலா விழுதை சேர்த்து, நிறம் மாற வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் தயிரை சேர்த்து கிளறி, அத்துடன் மல்லித் தூள், சீரகத்
தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, வேக வைத்துள்ள
உருளைக்கிழங்கை சேர்த்து பிரட்டி, மூடி வைத்து 3-4 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* பின்னர் மூடியைத் திறந்து, அதில் 1 கப் நீரை ஊற்றி, கரம் மசாலாவை
தூவி கிளறி, மீண்டும் மூடி வைத்து 3-4 நிமிடம் எண்ணெய் பிரியும் வரை
வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால் சுவையான
உருளைக்கிழங்கு கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications