Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
1 கப் வேகவைத்த உருளைக்கிழங்கு இருந்தா இந்த சூப்பரான ஸ்னாக்கை செய்யுங்க... மொறுமொறுனு டேஸ்ட் சூப்பரா இருக்கும்!
Potato Cutlet Recipe in Tamil: தினமும் பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு என்ன செய்து கொடுப்பது என்பது பெரும்பாலான அம்மாக்களுக்கு இருக்கும் பெரிய கவலையாகும். அந்த சமயத்தில் எப்போதும் செய்வது போன்று பஜ்ஜி, வடை, போண்டா என்று செய்யாமல் வீட்டில் உருளைக்கிழங்கும், பட்டாணியும் இருந்தால், அவற்றை வைத்து அருமையான சுவையில் கட்லெட் செய்து கொடுங்கள்.
இப்படி கட்லெட் செய்யும் போது, அது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். அதோடு இந்த கட்லெட் செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும். மாலை வேளையில் பசியுடன் உள்ள பிள்ளைகளுக்கு இதை செய்து கொடுத்தால், அவர்களின் பசியும் சட்டென்று அடங்கும், சுவையாகவும் இருக்கும்.

உங்களுக்கு உருளைக்கிழங்கு கட்லெட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு கட்லெட்டின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- உருளைக்கிழங்கு - 500 கிராம்
- வேகவைத்த பட்டாணி - 1 கப்
- பெரிய வெங்காயம் - 2
- இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 ஸ்பூன்
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - அரை கப்
- பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - அரை கப்
- பச்சைமிளகாய் - 3
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- முட்டை வெள்ளைக்கரு - 2
- ப்ரெட் தூள் - 2 கப்
- எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து கட்டியில்லாமல் நன்றாக மசித்துக் கொள்ளவும்.
- காய்ந்த பட்டாணியாக இருந்தால் அதை இரவே ஊறவைத்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். ப்ரோசன் பட்டாணியாக இருந்தால் அதை அப்படியே பயன்படுத்தலாம்.
- கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின்னர் பட்டாணி, மிளகாய்தூள், உப்பு சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கி இறக்கி வைக்கவும்.
- மசித்து வைத்த உருளைக்கிழங்கோடு வதக்கி ஆற வைத்த வெங்காய பட்டாணி கலவை, கொத்தமல்லி, கறிவேப்பிலை, 1கப் ப்ரெட் தூள், உப்பு சேர்த்து பிசையவும்.
- பின்னர் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி அவற்றை உள்ளங்கையில் கட்லெட்டுகளாக தட்டவும்.
- இந்த கட்லெட்டுகளை முட்டையின் வெள்ளைக்கருவில் முக்கி ப்ரெட் தூளில் புரட்டி எடுத்து தனியாக வைக்கவும்.
- 20 நிமிடம் ஃப்ரீசரில் வைத்து எடுத்து சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்தால் சூப்பரான மொறுமொறு உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி.



Click it and Unblock the Notifications