Latest Updates
-
கேரட்டும், ஜவ்வரிசியும் இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் செய்யுங்க.. பிள்ளைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
Nag Panchami 2026: நாக பஞ்சமியில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
காரசாரமான சிக்கன் ஈரல் வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்த 7 அறிகுறிகள் அடிக்கடி தெரியுதா? அப்ப அது குடல்வால் புற்றுநோயின் அறிகுறியா இருக்கலாம்.. உஷார்.. -
ஆகஸ்ட் 19-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..! -
கவுண்டம்பாளையம் சிக்கன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனச்சுமை அதிகரிக்கப்போகுதாம் -
புதன்-குருபகவான் இணைப்பால் சூப்பர் ஸ்டாரா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோவா ஸ்டைல் சிக்கன் மசாலா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
வார ராசிபலன் (16 August 2026 - 22 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா
2 உருளைக்கிழங்கும், 1 குடைமிளகாயும் வெச்சு.. சப்பாத்திக்கு இந்த கிரேவியை ட்ரை பண்ணி பாருங்க...
Potato Capsicum Gravy Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஹோட்டல் ஸ்டைலில் ஒரு சுவையான கிரேவை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கும், குடைமிளகாயும் உள்ளதா? அப்படியானால் அவ்விரண்டையும் கொண்டு அட்டகாசமான சுவையில் கிரேவி செய்யுங்கள். இந்த கிரேவி சப்பாத்தியுடன் மட்டுமின்றி, புலாவ், பூரியுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

உங்களுக்கு உருளைக்கிழங்கு குடைமிளகாய் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு குடைமிளகாய் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 5 பல்
* இஞ்சி - 1 இன்ச்
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* முந்திரி - 10
* தக்காளி - 2 (நறுக்கியது)
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய்- 1 டீஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2
* பிரியாணி இலை - 2
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* உருளைக்கிழங்கு - 2 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
* மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
* குடைமிளகாய் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பூண்டு, இஞ்சி சேர்த்து நல்ல மணம் வரும் வரை வதக்க
வேண்டும்.
* பின் அதில் வெங்காயம் மற்றும் முந்திரியை சேர்த்து, வெங்காயத்தை
கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து வதக்கி, சிறிது நீரை ஊற்றி மூடி
வைத்து, வெங்காயம், தக்காளி அனைத்தும் மென்மையாகும் வரை 10 நிமிடம்
வேக வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் வதக்கியதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
மற்றும் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து சூடேற்ற வேண்டும்.
* பின் அதில் சீரகம், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் துண்டுகளாக்கப்பட்டுள்ள உருளைக்கிழங்கை சேர்த்து 2-3
நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள்,
கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறி,
தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1/2 டீஸ்பூன்
சர்க்கரை சேர்த்து கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் வைத்து 5 நிமிடம்
கொதிக்க வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, அதில் துண்டுகளாக்கப்பட்ட
குடைமிளகாயை சேர்த்து கிளறி, 2 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து
இறக்கினால், சுவையான உருளைக்கிழங்கு குடைமிளகாய் கிரேவி தயார்.
Image Courtesy: Kavitha Samayalarai



Click it and Unblock the Notifications