Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
உருளைக்கிழங்கு பட்டர் பீன்ஸ் மசாலா - 10 நிமிடத்தில் சிம்பிளா எப்படி செய்யணும் தெரியுமா?
Potato Butter Beans Masala Recipe In Tamil: மதியம் சாம்பார், ரசத்துக்கு சிம்பிளான ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு உள்ளதா? அதோடு பட்டர் பீன்ஸ் கூட உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டையும் சேர்த்து ஒரு அருமையான மசாலா செய்து சாப்பிடுங்கள்.
இந்த உருளைக்கிழங்கு பட்டர் பீன்ஸ் மசாலா சாம்பார், ரசம் சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த மசாலா டக்கென்று செய்யக்கூடியவாறு மிகவும் ஈஸியாக இருக்கும். குறிப்பாக இந்த மசாலா குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு உருளைக்கிழங்கு பட்டர் பீன்ஸ் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு பட்டர் பீன்ஸ் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* பட்டர் பீன்ஸ் - 3/4 கப்
* உருளைக்கிழங்கு - 250 கிராம்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 2 1/2 கப்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* சிக்கன் மசாலா/கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் குக்கரில் பட்டர் பீன்ஸ் மற்றும் துண்டுகளாக்கப்பட்ட
உருளைக்கிழங்கை சேர்த்து, அத்துடன் 2 1/2 கப் நீரை ஊற்றி, மஞ்சள் தூள்
சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வைத்து 2
விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி,
தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத்
தூள், மிளகுத் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கிளறி விட
வேண்டும்.
* பிறகு அதில் வேக வைத்த பட்டர் பீன்ஸை சேர்த்து, அதோடு பீன்ஸ் வேக
வைத்த நீரை அரை கப் ஊற்றி கிளறி, வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, பெரிய
துண்டுகளாக உதிர்த்து விட்டு நன்கு மசாலா ஒன்று சேரும் வரை கிளறி விட
வேண்டும்.
* இறுதியாக அதில் சிக்கன் மசாலாவை சேர்த்து கிளறி, 2 நிமிடம் மூடி
வைத்து வேக வைத்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான
உருளைக்கிழங்கு பட்டர் பீன்ஸ் மசாலா தயார்.



Click it and Unblock the Notifications