Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
கசகசா பாயாசம்
நம் வீட்டு சமையலறையில் உள்ள கசகசாவை வைத்துக் கூட சுவையான பாயாசம் செய்யலாம் தெரியுமா? இந்த பாயாசம் நிச்சயம் உங்களுக்கு ஒரு நற்பெயரை வாங்கித் தரும்.
பண்டிகை அல்லது விஷேச நாட்களில் வீட்டில் பாயாசம் செய்வது வழக்கம். பொதுவாக பாயாசத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் நாம் அறிந்தது சேமியா பாயாசம், ஜவ்வரிசி பாயாசம், பருப்பு பாயாசம் போன்றவை தான். ஆனால் நம் வீட்டு சமையலறையில் உள்ள கசகசாவை வைத்துக் கூட சுவையான பாயாசம் செய்யலாம் தெரியுமா? இந்த பாயாசம் நிச்சயம் உங்களுக்கு ஒரு நற்பெயரை வாங்கித் தரும்.

உங்களுக்கு கசகசா பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கசகசா பாயாசத்தின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
* கசகசா விதைகள் - 3 டேபிள் ஸ்பூன்
* பச்சரிசி - 1 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் - 1/2 கப்
* வெல்லம் - 3/4 கப்
* தண்ணீர் - 1 1/2 கப்
* ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் பச்சரிசியை மற்றும் கசகசாவை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் தேங்காய் மற்றும் சிறிது நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் நீரை ஊற்றி, வெல்லத்தை முற்றிலும் உருக வைத்து இறக்கி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* பிறகு வெல்லப் பாகை அரைத்து வைத்துள்ள கசகசா விழுதை சேர்த்து அடுப்பில் வைத்து கட்டிகளின்றி நன்கு கிளறி, 10-15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இந்த நேரத்தில் பாயாசமானது சற்று கெட்டியாக ஆரம்பிக்கும்.
* பின் சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, பாயாசத்தில் ஊற்றி, அத்துடன் ஏலக்காய் பொடியை சேர்த்து நன்கு கிளறிவிட்டு இறக்கினால், சுவையான கசகசா பாயாசம் தயார்.
குறிப்பு:
* பாயாசம் மிகவும் கெட்டியாகிவிட்டால், அத்துடன் காய்ச்சிய பாலை தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளலாம்.
* உங்களுக்கு இனிப்பு குறைவாக அல்லது அதிகமாக வேண்டுமானால், அதற்கு ஏற்ப வெல்லத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
* ஒருவேளை உங்கள் வீட்டில் வெல்லம் இல்லாவிட்டால், அதற்கு பதிலாக சர்க்கரையை சேர்த்துக் கொள்ளலாம்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications