Latest Updates
-
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்
இட்லி, தோசைக்கு 10 நிமிடத்தில் காரசாரமான பூண்டு வெங்காய சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் அள்ளும்...
Poondu Vengaya Chutney Recipe in Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்யப் போகிறீர்களா? பெரும்பாலும் இட்லி, தோசை என்றால் ஒரே மாதிரி சட்னி, சாம்பார் தான் செய்வீர்களா?அதுவும் சட்னி என்றால் ஒரே சட்னியைத் தான் திரும்ப திரும்ப செய்வீர்களா?
அப்படியானால் அடுத்தமுறை இந்த பனிக்காலத்திற்கு இதமாக இருக்கும் வகையில் காரசாரமான பூண்டு வெங்காய சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி சட்டென்று 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும். மேலும் இந்த சட்னி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, அனைத்து விதமான டிபனுடனும் சேர்த்து சாப்பிடக்கூடியவாறு ருசியாக இருக்கும்.

உங்களுக்கு பூண்டு வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு வெங்காய சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* முழு பூண்டு - 2
* வரமிளகாய் - 6
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 1
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 ஸ்பூன்
* கடுகு - 1/2 ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 டேபிள்
ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு பற்களை சேர்த்து நன்கு நிறம் மாற வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், சுவைக்கேற்ப உப்பு
மற்றும் சிறிய நெல்லிக்காய் அளவு புளியை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை அதில் ஊற்றி, தேவையான அளவு நீரையும் ஊற்றி
கிளறி, ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு இறக்கினால், சுவையான
மற்றும் காரசாரமான பூண்டு வெங்காய சட்னி தயார்.



Click it and Unblock the Notifications