Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
வெங்காயம், தக்காளி இல்லாம இட்லி, தோசைக்கு 10 நிமிடத்தில் சைடு டிஷ் செய்யணுமா? அப்ப இத செய்யுங்க..
Garlic Thokku Recipe In Tamil: தக்காளி, வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அவற்றின் விலை சாமானிய மக்களால் சமாளிக்க முடியாத அளவில் உயர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் அவற்றை சமையலில் அளவாகவே பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
நீங்கள் இட்லி, தோசைக்கு வெங்காயம், தக்காளி கொண்டு தான் பெரும்பாலும் சைடு டிஷ் செய்வீர்களா? ஆனால் தற்போது உங்களால் அவற்றை அதிகமாக வாங்க முடியவில்லையா? அப்படியானால் கவலைப்படாதீர்கள். வெங்காயம், தக்காளி இல்லாமலேயே அட்டகாசமான ஒரு சைடு டிஷ்ஷை இட்லி, தோசைக்கு செய்யலாம். அது தான் பூண்டு தொக்கு. இதை செய்தால், 2 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். மேலும் இது சுவையாகவும் இருக்கும்.

உங்களுக்கு பூண்டு தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பூண்டு - 20 பல்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/4 கப்
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கசூரி மெத்தி - 1 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை - பாதி
செய்முறை:
* முதலில் பூண்டு பற்களின் தோலை நீக்கிவிட்டு, அதை நன்கு தட்டிக்
கொள்ள வேண்டும்.
* பின் தட்டிய பூண்டு பற்களை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு,
அத்துடன் மிளகாய் தூள், மல்லித் தூள், சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள்
சேர்த்து, 1/4 கப் நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் கலந்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறி, 5
நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் கசூரி மெத்தியை எடுத்து கைகளால் நசுக்கி சேர்த்து நன்கு
கிளறி, 2 நிமிடம் வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக அதில் பாதி எலுமிச்சையை சேர்த்து கிளறினால், சுவையான
பூண்டு தொக்கு தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications