Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
இட்லி, தோசைக்கு 5 நிமிடத்தில் வெங்காயம், தக்காளி இல்லாமல் சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.
Poondu Gravy Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு சிம்பிளான ஒரு சைடு டிஷ் செய்யணுமா? ஆனால் வீட்டில் வெங்காயம், தக்காளி எதுவும் இல்லையா? உங்கள் வீட்டில் பூண்டு உள்ளதா? அப்படியானால் கவலையை விடுங்கள். ஏனெனில் பூண்டு கொண்டே வெறும் 5 நிமிடத்தில் அசத்தலான சைடு டிஷ் செய்யலாம்.
இந்த பூண்டு சைடு டிஷ் வேலைக்கு செல்பவர்களுக்கு ஏற்ற ரெசிபி. பேச்சுலர்களும் இந்த பூண்டு ரெசிபியை செய்யலாம். அந்த அளவில் இது செய்வதற்கு மிகவும் குறைவான பொருட்களே போதுமானது. முக்கியமாக இந்த பூண்டு சைடு டிஷ் இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு இந்த பூண்டு சைடுடிஷ்ஷை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பூண்டு - 15 பல்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4
* தண்ணீர் - சிறிது
* தயிர் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் பூண்டு பற்களை மிக்சர் ஜாரில் போட்டு ஒருமுறை லேசாக
அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து, பின் உளுத்தம் பருப்பு, கடலைப்
பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் அடித்து வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து நன்கு நிறம்
மாறும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள் சேர்த்து
குறைவான தீயில் வைத்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, நீர் நன்கு கொதிக்க
ஆரம்பித்ததும், அதில் 1/2 கப் தயிரை நன்கு அடித்து சேர்க்க
வேண்டும்.
* தயிரை சேர்த்ததும், தாமதிக்காமல் நன்கு கிளறி விட வேண்டும். பின்
அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும்.
* பின் 3 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான பூண்டு
கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications