Latest Updates
-
பன்னீரை இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களை ஏமாற்றும் திருட்டு குணம் உள்ளவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
முகத்தில் கருந்திட்டுக்கள் அதிகமா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா? -
Aadi 2026: ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
வெண்டைக்காயும் வேர்க்கடலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 வேளையும் சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது.. -
சூரியன் சனிபகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் பலமும், செல்வாக்கும் அதிகரிக்கப் போகுதாம் -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த மணமணக்கும் சாம்பாரை வைச்சு பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
எலுமிச்சை நீர் Vs தேன் கலந்த நீர் - இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது? -
தாய் கிழவி இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன் - என்ன செய்திருக்கார் பாருங்க?
பொங்கல் பண்டிகையன்று செய்யும் பொங்கல் குழம்பு பற்றி தெரியுமா?
சிலரது வீடுகளில் பாரம்பரியமாக பொங்கல் பண்டிகையன்று பொங்கல் குழம்பு வைக்கும் வழக்கம் இருக்கும். இந்த பொங்கல் குழம்பில் 5, 7, 9 என்ற ஒற்றை எண்ணிக்கையில் காய்களை எடுத்து, அவற்றைக் கொண்டு புளிக்குழம்பு செய்து சாப்பிடுவார்கள்
Pongal 2023: பொங்கல் பண்டிகையன்று புதிய பச்சரிசியால் பொங்கலை செய்து, அதை சூரியனுக்கு படைத்து வணங்குவோம். இது தவிர சிலரது வீடுகளில் பாரம்பரியமாக பொங்கல் பண்டிகையன்று பொங்கல் குழம்பு வைக்கும் வழக்கம் இருக்கும். இந்த பொங்கல் குழம்பில் 5, 7, 9 என்ற ஒற்றை எண்ணிக்கையில் காய்களை எடுத்து, அவற்றைக் கொண்டு ஒரு புளிக்குழம்பு செய்து மதிய வேளையில் சாப்பிடுவார்கள். நீங்கள் இதுவரை இந்த மாதிரி பொங்கல் குழம்பை செய்து சாப்பிட்டதில்லை என்றால், இந்த பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் குழம்பு செய்து சாப்பிடுங்கள்.

இந்த பொங்கல் குழம்பு செய்வது சுலபம். உங்களுக்கு பொங்கல் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொங்கல் குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காய்கறிகள் - 3 கப் (மஞ்சள் பூசணி, உருளைக்கிழங்கு, வாழைக்காய், அவரைக்காய், மொச்சை காய், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, மாங்காய்)
* சின்ன வெங்காயம் - 15
* தக்காளி - 2
* பூண்டு - 2 டேபிள் ஸ்பூன்
* புளி - 1 எலுமிச்சை அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
மசாலா பொடிகள்...
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் காய்கறிகளை நீரில் கழுவி, அவற்றை துண்டுகளாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் புளியை நீரில் ஊற வைத்து, நன்கு பிசைந்து வடிகட்டி சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் காய்கறிகளைப் போட்டு, அதை தொடர்ந்து மசாலா பொடிகளைத் தூவி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, நன்கு மூடி வைத்து காய்கறிகளை வேக வைக்க வேண்டும். அவ்வப்போது மூடியைத் திறந்து காய்கறிகள் வெந்துவிட்டதா என்பதை பார்க்க வேண்டும்.
* காய்கறிகள் நன்கு வெந்ததும், அதில் புளிச்சாற்றினை ஊற்றி கிளறி, மிதமான தீயில் பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான பொங்கல் குழம்பு தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications