Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
அடிக்கடி முட்டை குழம்பு செய்வீங்களா.. அடுத்த முறை பாண்டிச்சேரி ஸ்டைல்-ல பண்ணுங்க.. செமயா இருக்கும்...
Pondicherry Egg Curry: உங்கள் வீட்டில் அடிக்கடி முட்டை குழம்பு செய்வீர்களா? அதுவும் ஒரே மாதிரி தான் செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை முட்டை குழம்பை செய்வதாக இருந்தால், அதை பாண்டிச்சேரி ஸ்டைலில் செய்யுங்கள்.
இந்த பாண்டிச்சேரி ஸ்டைல் முட்டை குழம்பு சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு பாண்டிச்சேரி ஸ்டைல் முட்டை குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாண்டிச்சேரி ஸ்டைல் முட்டை குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* மல்லி - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 4
* கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 3 டீஸ்பூன்
பிற பொருட்கள்...
* தேங்காய் - 1/2 மூடி
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கிராம்பு - 2
* பட்டை - 2 இன்ச்
* வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு - 6 பல்
* பெரிய தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - 1 1/2 டீஸ்பூன்
* வேக வைத்த முட்டை - 5-6
* எலுமிச்சை - 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்)
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் அரைமூடி தேங்காயை அரைத்து, கெட்டியாக தேங்காய் பால்
எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் மல்லி, பச்சை மிளகாய், கசகசா மற்றும் சோம்பு
சேர்த்து சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி,
கிராம்பு, பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் வெங்காயத்தை
சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை
வதக்கவும்.
* அடுத்து அதில் அரைத்த விழுதை சேர்த்து, 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி, தக்காளியை நன்கு
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் சிறிது தேங்காய் பால் மற்றும் தேவையான அளவு நீரை
ஊற்றி, சுவை பார்த்து, குறைவான தீயில் வைத்து, 10 நிமிடம் கொதிக்க
வைத்து இறக்க வேண்டும்.
* இறுதியாக அதில் மீதமுள்ள தேங்காய் பால், வேக வைத்துள்ள முட்டை
மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து, கொத்தமல்லியைத் தூவினால்,
பாண்டிச்சேரி ஸ்டைல் முட்டை குழம்பு தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications