Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
டாக்டர் சிவராமன் வீட்டு விஷேசத்தில் பரிமாறப்பட்ட மாதுளை பொரியல் - எப்படி செய்யணும் தெரியுமா?
Pomegranate Poriyal Recipe In Tamil: சமீபத்தில் நடந்த சித்த மருத்துவர் சிவராமன் வீட்டு விஷேசத்தில் நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களின் கேட்டரிங் வித்தியாசமான அதே சமயம் ஆரோக்கியமான பல ரெசிபிக்களை பரிமாறியது.
அதில் இன்று வரை அனைவராலும் பேசப்பட்டு வரும் ஒரு ரெசிபி தான் மாதுளம் பழ பொரியல். இதுவரை யாரும் எதிர்பார்க்காத ஒரு வித்தியாசமான பொரியலை இவர் இந்த திருமணத்தில் பரிமாறி மக்களிடையே இன்னும் பிரபமாகிவிட்டார். தற்போது பல பிரபலங்களின் வீடுகளில் நடக்கும் விஷேசத்திற்கு இவரது சமையலை பலரும் விரும்புகிறார்கள்.

மாதுளம் பழ பொரியல் என்றதுமே நிச்சயம் பலரது மனதிலும் என்னது மாதுளம் பழத்தில் பொரியலா என்று யோசிப்போம். ஆனால் இந்த மாதுளம் பழம் சுவையானது மட்டுமின்றி, சத்தானமும் கூட. மாதுளையை சாதாரணமாக சாப்பிட பிடிக்காதவர்களுக்கு மாதுளம் பழ பொரியலை செய்து கொடுத்தால், நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்கள் வீட்டில் உள்ளோருக்கும் மாதுளம் பழ பொரியலை செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் மாதுளம் பழம் இருந்தால், இன்று முயற்சி செய்யுங்கள். கீழே மாதுளம் பழ பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மாதுளை விதைகள் - 1 கப்
* பெரிய வெங்காயம் - 1
* பச்சை மிளகாய் - 1
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நன்கு பொடியாக நறுக்கிய
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சிறிது உப்பு
தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் மாதுளை விதைகளை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி கிளறி
விட வேண்டும்.
* இறுதியாக துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறினால், சுவையான
மாதுளம் பழ பொரியல் தயார்.
Image Courtesy: thatsmellsdeliciouskitchen



Click it and Unblock the Notifications