Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ஈவ்னிங் நேரத்துல 10 நிமிடத்தில் சுவையான ஸ்நாக்ஸ் செய்யணுமா? அப்ப அன்னாசிப்பழ ரவா பணியாரத்தை செய்யுங்க..
Pineapple Rava Paniyaram Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தைகளுக்கு, பசியைப் போக்கும் வகையிலும், அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் ஒரு ஸ்நாக்ஸ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அன்னாசிப்பழம் உள்ளதா?
அப்படியானால் சுவையான மற்றும் மென்மையான அன்னாசிப்பழ ரவா பணியாரத்தை செய்யுங்கள். இந்த பணியாரம் நன்கு இனிப்பாகவும், பஞ்சு போன்று மென்மையாகவும் இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு அன்னாசிப்பழ ரவா பணியாரத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அன்னாசிப்பழ ரவா பணியாரம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ரவை - 1/2 கப்
* மைதா - 1/4 ப்
* சர்க்கரை - 6 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் தூள் - சிறிது
* உப்பு - 1 சிட்டிகை
* சோடா உப்பு - 1/4 டீஸ்பூன்
* காய்ச்சிய பால் - 1/4 கப்
* நாட்டுச்சர்க்கரை - சிறிது
* அன்னாசிப்பழம்- சிறிது (பொடியாக நறுக்கியது)
* நெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் ரவையை எடுத்து, அத்துடன் மைதா, சர்க்கரை
ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய், தயிர், ஏலக்காய் தூள், 1 சிட்டிகை
உப்பு, 1/4 டீஸ்பூன் சோடா உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் காய்ச்சிய பாலை 1/4 கப் ஊற்றி கட்டிகளின்றி, நன்கு
கலந்து கொள்ள வேண்டும். மிகவும் கெட்டியாக இருந்தால், இன்னும் கொஞ்சம்
பாலை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் மிகவும் நீர் போன்று கலந்து கொள்ள
வேண்டாம். ஓரளவு கெட்டியாகவே கலந்து கொள்ளுங்கள்.
* பிறகு ஒரு பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும்,
குழிகளில் முதலில் நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்ற வேண்டும்.
* அதன் பின் அந்த குழிகளில் சிறிது நாட்டுச்சர்க்கரையை சேர்க்க
வேண்டும்.
* பின்னர் அந்த குழிகளில் பொடியாக நறுக்கிய அன்னாசிப்பழ துண்டுகளை
சிறிது சேர்க்க வேண்டும்.
* அடுத்து அந்த குழிகளில் கலந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக
ஊற்றி, மூடி வைத்து குறைவான தீயில் வைத்து 10 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, பணியாரங்களை திருப்பிப்
போட்டு 2 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான அன்னாசிப்பழ ரவா
பணியாரம் தயார்.
Image Courtesy: Madras Samayal



Click it and Unblock the Notifications