Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
அன்னாசி பழத்தை வைச்சு இந்த மாதிரி ரசம் செஞ்சு பாருங்க... வேற குழம்பே வேணாம் இதுவே போதும்...!
Pineapple Rasam Recipe in Tamil: நம் பாரம்பரியத்தில் விருந்து உபசரிப்பு என்றால் துவக்கத்தில் இனிப்பும், கடைசியில் ரசம் மற்றும் மோர் இல்லாமல் இருக்காது. ரசத்தில் சில பொருட்களை மட்டும் கூட்டி குறைத்து புளி ரசம், தக்காளி ரசம், பருப்பு ரசம், மிளகு ரசம், செலவு ரசம் மற்றும் சில மருத்துவ பொருட்களை சேர்த்து ரசம் என பலவகையான ரசம் செய்திருப்போம்.
ஆனால் இப்போது பழங்களை வைத்து கூட ரசம் வைக்க துவங்கிவிட்டார்கள். அதில் நாம் இன்று பார்க்க போவது அன்னாசி பழ ரசம். சரி வாங்க எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- அன்னாசி பழம் - ¼ கிலோ
- மிளகு -1 டீ ஸ்பூன்
- சீரகம் -1 டீ ஸ்பூன்
- மஞ்சள் பொடி - ½ டீ ஸ்பூன்
- பூண்டு - 8 அல்லது 10 பல்
- துவரம் பருப்பு - ¼ கப்
- பச்சை மிளகாய் - 2
- தக்காளி - 2
- காய்ந்த மிளகாய் - 2
- உப்பு - தேவையான அளவு
- நெய் - 1 டேபிள் ஸ்பூன்
- கடுகு -½ ஸ்பூன்
- கருவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
- முதலில் துவரம் பருப்பை குக்கரில் சேர்த்து இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக தண்ணீர் சேர்த்து சுத்தம் செய்து கொள்ளவும்.
- அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும்.
- பருப்பு நன்கு குழைவாக வெந்து வரும் வரை விசில் விட்டு அடுப்பை அணைத்து ஆற விடவும்.
- தக்காளியை நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீரில் சேர்த்து வேக விடவும்.
- நன்றாக வெந்து தோலில் விரிசல் வந்ததும் அடுப்பை அணைத்து ஆற விடவும்.
- நன்கு ஆறியதும் அதை கரைத்து தோல் பகுதியை நீக்கி வடித்து கொள்ளவும்.
- அன்னாசி பழத்தை தோல் சீவி சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்.
- அதில் பாதியை எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- நறுக்கிய அன்னாசி பல துண்டுகளை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.
- மீதம் இருக்கும் பாதியை மிக சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- அதே மிக்ஸி ஜாரில் பூண்டு, மிளகு, சீரகம், பச்சை மிளகாய் மற்றும் நன்கு ஐந்து கருவேப்பிலை சேர்த்து பல்ஸ் விட்டு அரைத்து கொள்ளவும்.
- ரசம் தாளிக்கும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் சேர்த்து உருக விடவும்.
- அதில் கடுகு சேர்த்து நன்றாக பொரிய விடவும்.
- பின் கருவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்து கொள்ளவும்.
- அதனுடன் நறுக்கிய அன்னாசி பழ துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
- பாதி வதங்கியதும் அரைத்து வைத்த அன்னாசி விழுது மற்றும் அரைத்து வைத்த மிளகு சீரகம் சேர்த்து கொஞ்ச நேரம் வதக்கவும்.
- அதில் கரைத்து வைத்த தக்காளி மற்றும் வேக வைத்த பருப்பை சேர்க்கவும்.
- நன்றாக நுரை கட்டியதும் பெருங்காயம் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து இறக்கினால் சுவையான அன்னாசி பழ ரசம் ரெடி!



Click it and Unblock the Notifications