Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சப்பாத்தி, பூரிக்கு சூப்பராக இருக்கும்... அன்னாசி மசாலா
நீங்கள் அன்னாசிப்பழ பிரியரா? அன்னாசிப்பழத்தை வித்தியாசமாக சாப்பிட விரும்புவீர்களா? அப்படியானால் அன்னாசியைக் கொண்டு மசாலா செய்யுங்கள். இந்த அன்னாசி மசாலா கர்நாடகாவில் மிகவும் பிரபலமானது.
நீங்கள் அன்னாசிப்பழ பிரியரா? அன்னாசிப்பழத்தை வித்தியாசமாக சாப்பிட விரும்புவீர்களா? அப்படியானால் அன்னாசியைக் கொண்டு மசாலா செய்யுங்கள். இந்த அன்னாசி மசாலா கர்நாடகாவில் மிகவும் பிரபலமானது. இது இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது வித்தியாசமான சுவையைக் கொண்டிருப்பதால், நிச்சயம் நீங்கள் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு அன்னாசி மசாலா எப்படி செய்வதன்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அன்னாசி மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அன்னாசி - 1 கப்
* புளிச்சாறு - 1/4 கப்
* வெல்லம் - 5 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* எள்ளு - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* காஷ்மீரி வரமிளகாய் - 6
* கறிவேப்பிலை - சிறிது
* துருவிய தேங்காய் - 3/4 கப்
* தண்ணீர் - 1/2 கப்
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் அன்னாசியை ஒரு வாணலியில் போட்டு, நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அதே வேளையில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் தேங்காய் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அன்னாசி வெந்ததும், அதில் புளிச்சாறு, வெல்லம், மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து, 15 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, 10 நிமிடம் குறைவான தீயில் வைத்து நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சப்ஜியுடன் சேர்த்து கிளறினால், சுவையான அன்னாசி மசாலா தயார்.
Image Courtesy: hebbarskitchen



Click it and Unblock the Notifications
