Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
பிச்சுப்போட்ட கோழி வறுவல்
பலருக்கும் சிக்கன் பிடித்தமான இறைச்சியாகும். சிக்கனைக் கொண்டு பல வித்தியாசமான ரெசிபிக்களை செய்யலாம். அதில் ஒன்று தான் பிச்சுப்போட்ட கோழி வறுவல். இது செய்வது மிகவும் ஈஸி.
கொரோனா பரவ ஆரம்பித்து, நோய்த்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த பல மாதங்களாக லாக்டவுன் போடப்பட்டிருந்தது. இக்காலத்தில் பலரும் வீட்டிலேயே இருந்ததால், நம்மில் பலரும் சமையலைக் கற்றுக் கொண்டதோடு, தற்போது வீட்டிலேயே பல சுவையான ரெசிபிக்களை முயற்சிக்கவும் விரும்புகிறார்கள். இது ஒரு நல்ல பழக்கம் என்றே கூறலாம். அந்த வகையில் பலருக்கும் சிக்கன் பிடித்தமான இறைச்சியாகும். சிக்கனைக் கொண்டு பல வித்தியாசமான ரெசிபிக்களை செய்யலாம். அதில் ஒன்று தான் பிச்சுப்போட்ட கோழி வறுவல். இது செய்வது மிகவும் ஈஸி.

உங்களுக்கு பிச்சுப்போட்ட கோழி வறுவல் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த பிச்சுப்போட்ட கோழி வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 500 கிராம்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சிக்கனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் கழுவிய சிக்கனை குக்கரில் போட்டு, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மூடி அடுப்பில் வைத்து, 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, எலும்பில் உள்ள சிக்கனின் சதைப்பகுதியை கையால் பிய்த்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் மிளகுத் தூளைத் தவிர, மிளகாய் தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கிளறி விட வேட்ணடும்.
* பின் சிக்கனைப் போட்டு நன்கு கிளறி, மேலே மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பிச்சுப்போட்ட கோழி வறுவல் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications