Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
டீக்கடை டேஸ்ட்-ல 100% பர்ஃபெக்ட்டான டீயை எப்படி போடணும்-ன்னு தெரிஞ்சுக்கணுமா? இத படிங்க...
Perfect Tea Recipe In Tamil: நாம் தினமும் எத்தனையோ ரெசிபிக்களை சமைத்து சாப்பிடுவோம். ஆனால் காபி, டீ குடிக்காமல் இருக்கவே முடியாது. இதில் காபி சிலருக்கு பிடிக்கும் என்றால், இன்னும் சிலருக்கு டீ என்றால் ரொம்ப பிடிக்கும். காபி, டீ போடுவதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை என்று பலரும் கூறலாம்.
ஆனால் சில சமயங்களில் அந்த காபி, டீயை தயாரிக்கும் போது செய்யும் சிறு தவறு, அதன் சுவையையே மாற்றி, குடிக்கவே முடியாத அளவில் கெடுத்துவிடும். அதுவும் சிலர் டீ போட்டால், அதைக் குடிக்கவே முடியாது. ஒன்று மிகவும் ஸ்ட்ராங்காக போடுவார்கள் இல்லாவிட்டால் மிகவும் லைட்டாக போடுவார்கள். சரியாக பக்குவத்தில் இன்னும் நிறைய பேருக்கு டீ போடத் தெரியவில்லை என்று தான் கூற வேண்டும். உங்களுக்கும் சரியான பக்குவத்தில் டீ போட தெரியாதா?

கீழே சரியான பக்குவத்தில் எப்படி டீ போடுவது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சரியான பக்குவத்தில் டீ எப்படி போடுவது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஏலக்காய் - 3
* இஞ்சி - 1 சிறிய துண்டு
* தண்ணீர் - 3/4 டம்ளர்
* சர்க்கரை - 2 டீஸ்பூன்
* டீத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
* பால் - 2 டம்ளர்
* கிராம்பு - 2
செய்முறை:
* முதலில் இடிக்கும் உரலில் ஏலக்காயைப் போட்டு தட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் இஞ்சி துண்டை சேர்த்து அதையும் நன்கு தட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 3/4
டம்ளர் நீரை ஊற்றி, அதில் தட்டி வைத்துள்ள ஏலக்காய், இஞ்சியை
சேர்த்து, அத்துடன் 2 டீஸ்பூன் அல்லது சுவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து
நன்கு 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் 1 1/2 டீஸ்பூன் டீத்தூளை சேர்த்து, நீர் 1/4 டம்ளராக
வரும் அளவில் சுண்ட காய்ச்ச வேண்டும்.
* பிறகு அதில் நீர் அதிகம் சேர்க்காமல் காய்ச்சி ஆற வைத்த பாலை 2
டம்ளர் ஊற்றி, நன்கு 2 நிமிடம் கரண்டியால் கிளறி விட்டு கொதிக்க வைக்க
வேண்டும்.
* இறுதியாக அதில் 2 கிராம்பை சேர்த்து 1 கொதி விட்டு இறக்கி, வடிகட்டி
பரிமாறினால், சுவையான மற்றும் பர்ஃபெட்டான டீ தயார்.



Click it and Unblock the Notifications