Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
மணமணக்கும்... காரசாரமான.. பெப்பர் சிக்கன் குழம்பு செய்வது எப்படி?
Pepper Chicken Kuzhambu: நீங்கள் சிக்கன் பிரியரா? அடிக்கடி வீட்டில் சிக்கன் வாங்கி சமைப்பீர்களா? எப்போதும் சிக்கனை வாங்கினால், அதை ஒரே மாதிரி தான் குழம்பு செய்து சாப்பிடுவீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சளி, இருமல் பிடித்துள்ளதா? அப்படியானால் சிக்கனைக் கொண்டு பெப்பர் சிக்கன் குழம்பு செய்து கொடுங்கள்.
இந்த பெப்பர் சிக்கன் குழம்பு சளி, இருமலை சட்டென சரிசெய்யும். மேலும் இந்த குழம்பு சாதம், சப்பாத்தி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். மாலை வேளையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும், விரைவில் செய்யக்கூடிய வகையில் ஈஸியான செய்முறையைக் கொண்டது.

உங்களுக்கு பெப்பர் சிக்கன் குழம்பு எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பெப்பர் சிக்கன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1 கிலோ
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3-4 (நீளமாக கீறியது)
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* சோம்புத் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 3/4-1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவி தினியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை
வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து கிளறி உயர் தீயில்
வைத்து, 4-5 நிமிடம் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், மல்லித் தூள், சோம்புத் தூள், மிளகுத்
தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, குறைவான தீயில்
வைத்து, மூடி வைத்து சிக்கனை 4-5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து கிளறி, 3-4 நிமிடம் சிக்கனை நன்கு
வேக வைக்க வேண்டும்.
* சிக்கனில் இருந்து நீர் விட்டு சுண்டியதும், அதில் குழம்பிற்கு
தேவையான அளவு நீரை ஊற்றி, 4-5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க
வேண்டும்.
* இறுதியாக மேலே கொத்தமல்லி மற்றும் கரம் மசாலாவைத் தூவி நன்கு கிளறி
இறக்கினால், சுவையான சிக்கன் பெப்பர் குழம்பு தயார்.
Image Courtesy: happyscook



Click it and Unblock the Notifications