Latest Updates
-
Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை -
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது! -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கை இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழப்போகுதாம் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க..
காரசாரமான... பெப்பர் சிக்கன் கிரேவி
இரவு உங்கள் வீட்டில் சப்பாத்திக்கு சிக்கன் ரெசிபியை சைடு டிஷ்ஷாக செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் சற்று காரமான சிக்கன் ரெசிபி செய்ய நினைத்தால், அதற்கு பெப்பர் சிக்கன் கிரேவி தான் பொருத்தமாக இருக்கும்.
இரவு உங்கள் வீட்டில் சப்பாத்திக்கு சிக்கன் ரெசிபியை சைடு டிஷ்ஷாக செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் சற்று காரமான சிக்கன் ரெசிபி செய்ய நினைத்தால், அதற்கு பெப்பர் சிக்கன் கிரேவி தான் பொருத்தமாக இருக்கும். இந்த கிரேவி செய்வது மிகவும் சுலபம். குறிப்பாக இந்த பெப்பர் சிக்கன் கிரேவி சப்பாத்திக்கு மட்டுமின்றி, இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்குமே அட்டகாசமாக இருக்கும்.

அதோடு இது பேச்சுலர்களும் முயற்சிக்கும் வகையில் எளிமையான செய்முறைக் கொண்டது. கீழே பெப்பர் சிக்கன் கிரேவியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 500 கிராம்
* தேங்காய் எண்ணெய் - 1/4 கப்
* பிரியாணி இலை - 1
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 2 டீஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
வறுத்து அரைப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
செய்முறை:
* முதலில் சிக்கனை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, சிக்கனைப் போட்டு, சிறிது உப்பு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைப்பதற்கு கொடுத்துள்ள மசாலாப் பொருட்களை சேர்த்து வறுத்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி இறக்கி, ஜாரில் போட்டு நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
* பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
* அதன் பின்பு தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்கிய பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
* பிறகு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு கிளறி விடவும்.
* இப்போது வேக வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கிளறி, குறைவான தீயில் எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கி இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால் பெப்பர் சிக்கன் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications