Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
மழை நேரத்துல சிக்கனை வாங்கி இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு சாப்பிடுங்க.. ருசியாவும், இதமாவும் இருக்கும்..
Pepper Chicken Gravy Recipe In Tamil: தற்போது மழை பெய்து கொண்டிருப்பதால், மதியம் நன்கு காரசாரமாக சாப்பிட ஆசையாக இருக்கும். அதுவும் சிக்கனை வாங்கி வந்து பெப்பர் சிக்கன் கிரேவி செய்தால் இன்னும் அட்டகாசமாக இருக்கும் அல்லவா?
குறிப்பாக வழக்கமாக செய்யும் கிரேவியைப் போன்று செய்யாமல், தனியாக ஒரு மசாலா அரைத்து பெப்பர் சிக்கன் கிரேவி செய்யும் போது, சுவை இன்னும் அற்புதமாக இருக்கும். சளி பிடித்திருப்பவர்கள் இந்த பெப்பர் சிக்கன் கிரேவியை செய்து சாப்பிடும் சளி வெளியேறி விரைவில் விடுபடலாம்.

உங்களுக்கு பெப்பர் சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பெப்பர் சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு...
* மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பட்டை - 2 சிறிய துண்டு
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* வரமிளகாய் - 2
கிரேவிக்கு...
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 சிறிய துண்டு
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சிக்கன் - 3/4 கிலோ
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* முந்திரி - 5-6 (நீரில் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்)
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சிக்கனை நீரில் நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு
கொடுத்துள்ள பொருட்களான மிளகு, மல்லி, சீரகம், பட்டை, கிராம்பு,
ஏலக்காய், வரமிளகாய் சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி
குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து பொடி
செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட்
மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து, மஞ்சள் தூள் தூவி நன்கு
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு 1 நிமிடம் கிளறி,
அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு
பிரட்டி விட்டு, சிறிது நீரை ஊற்றி கிளறி மூடி வைத்து 10-15 நிமிடம்
வேக வைக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் ஊற வைத்துள்ள முந்திரியை சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த முந்திரி விழுதை சிக்கனுடன் சேர்த்து கிளறி, 5 நிமிடம்
மூடி வைத்து வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான
பெப்பர் சிக்கன் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications