Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது!
பீர்க்கங்காயும், வேர்க்கடலையும் வெச்சு ஒருமுறை இந்த தொக்கு செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா அள்ளும்..
Peerkangai Thokku Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு சற்று வித்தியாசமான சுவையில் சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பீர்க்கங்காய் உள்ளதா? அப்படியானால் அந்த பீர்க்கங்காயைக் கொண்டு தொக்கு செய்யுங்கள்.
இந்த பீர்க்கங்காய் தொக்கு செய்வதற்கு வெங்காயம், தக்காளி எதுவும் தேவையில்லை. வேர்க்கடலையும், பீர்க்கங்காயும் இருந்தாலே போதும். வீடே மணக்கும் அளவில் சுவையான தொக்கு செய்யலாம். இப்படி தொக்கு செய்யும் போது பீர்க்கங்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு பீர்க்கங்காய் தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீர்க்கங்காய் தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பிஞ்சு பீர்க்கங்காய் - 1/4 கிலோ
* வேர்க்கடலை - 1 கைப்பிடி
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பீர்க்கங்காயின் தோலை நீக்கிவிட்டு, அதை துண்டுகளாக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் வேர்க்கடலை பச்சையாக இருந்தால், அதை வாணலியில் போட்டு
வறுத்து இறக்கி, தோலை நீக்கிவிட்டு, பொடித்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி,
பின் அதில் துண்டுகளாக்கப்பட்ட பீர்க்கங்காயை சேர்த்து 5 நிமிடம்
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம்
மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு 1 நிமிடம் கிளறி விட்டு வேக வைக்க
வேண்டும்.
* பின் அதில் பொடித்து வைத்துள்ள வேர்க்கடலையை சேர்த்து நன்கு கிளறி,
கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, மூடி வைத்து 5 நிமிடம் கொதிக்க
வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பீர்க்கங்காய்
தொக்கு தயார்.



Click it and Unblock the Notifications