Latest Updates
-
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
பீர்க்கங்காய் சாம்பார்
நிறைய பேருக்கு பீர்க்கங்காயை எப்படி சமைத்து சாப்பிடுவதென்றே தெரியாது. பீர்க்கங்காயை பலவாறு சமைத்து சாப்பிடலாம். நீங்கள் சாம்பார் பிரியர் என்றால், பீர்க்கங்காய் சாம்பாரை செய்து சாப்பிடுங்கள்.
பீர்க்கங்காய் உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் மற்றும் உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு இது மிகவும் நல்லது. ஆனால் நிறைய பேருக்கு பீர்க்கங்காயை எப்படி சமைத்து சாப்பிடுவதென்றே தெரியாது. பீர்க்கங்காயை பலவாறு சமைத்து சாப்பிடலாம். நீங்கள் சாம்பார் பிரியர் என்றால், பீர்க்கங்காய் சாம்பாரை செய்து சாப்பிடுங்கள். இந்த சாம்பார் சாதத்துடன் மட்டுமின்றி, தோசையுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு பீர்க்கங்காய் சாம்பார் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீர்க்கங்காய் சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பீர்க்கங்காய் - 1 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* துவரம் பருப்பு - 1 கப்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* சாம்பார் பவுடர் - 3 டேபிள் ஸ்பூன்
* புளி - 1 நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் குக்கரில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி, மஞ்சள் தூள், வெங்காயம், தக்காளி சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பீர்க்கங்காயை சேர்த்து 4-5 நிமிடம் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து, அத்துடன் சாம்பார் பவுடரை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
* அதன் பின் புளிச்சாறு சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, சாம்பாரில் ஊற்றி கிளறினால், சுவையான பீர்க்கங்காய் சாம்பார் தயார்.



Click it and Unblock the Notifications
