Latest Updates
-
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா? -
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியன்-புதன்-கேது நட்சத்திரம் ஒரே நட்சத்திரத்தில் இணைவதால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
பீர்க்கங்காயை எப்படி சமைக்குறது-ன்னு தெரியலையா? இந்த மாதிரி சட்னி செய்யுங்க.. சாதம், தோசைக்கு செமயா இருக்கும்.
Peerkangai Nilakadalai Chutney Recipe: உங்கள் வீட்டில் பீர்க்கங்காய் உள்ளதா? அந்த பீர்க்கங்காயை எப்படி சமைப்பது என்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் வேர்க்கடலை உள்ளதா? அப்படியானால் அந்த பீர்க்கங்காய் மற்றும் வேர்க்கடலையைக் கொண்டு சட்னி செய்யுங்கள்.
இந்த பீர்க்கங்காய் சட்னி இட்லி தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னி உங்கள் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். அதோடு இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு பீர்க்கங்காய் வேர்க்கடலை சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீர்க்கங்காய் வேர்க்கடலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
* வேர்க்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* பூண்டு - 5 பல்
* பச்சை மிளகாய் - 4
* புளி - 1/4 இன்ச்
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* பீர்க்கங்காய் - 250 கிராம் (தோலுரித்து நறுக்கியது)
* மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* வெல்லம் - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 2
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், வேர்க்கடலை, கடலைப் பருப்பு, பூண்டு, பச்சை மிளகாய்,
புளி, கறிவேப்பிலை சேர்த்து குறைவான தீயில் வைத்து, பொன்னிறமாக
வறுத்து இறக்கி, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பீர்க்கங்காயை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள்,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் வேக
வைக்க வேண்டும்.
* பீர்க்கங்காய் நன்கு வெந்ததும், அதில் வெல்லம் மற்றும்
கொத்தமல்லியைத் தூவி சில நொடிகள் வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்கள் மற்றும் வதக்கி வைத்துள்ள
காய்கறிகளை சேர்த்து, ஓரளவு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான பீர்க்கங்காய்
வேர்க்கடலை சட்னி தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications