Latest Updates
-
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா?
சப்பாத்திக்கு பீர்க்கங்காய் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. சிக்கன் கிரேவியே தோத்துடும்...
Peerkangai Gravy Recipe In Tamil: நைட் வீட்டில் பெரும்பாலும் சப்பாத்தி தான் செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான சைடு டிஷ் செய்து போரடித்துவிட்டதா? வீட்டில் பீர்க்கங்காய் உள்ளதா? அப்படியானால் அந்த பீர்க்கங்காயைக் கொண்டு கிரேவி செய்யுங்கள்.
இந்த பீர்க்கங்காய் கிரேவி சப்பாத்தி, பூரி, நாண் என அனைத்துடனும் சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த கிரேவி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். அதோடு இந்த கிரேவி சிக்கன் கிரேவியையே தோற்கடிக்கும் வகையில் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு பீர்க்கங்காய் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீர்க்கங்காய் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பிஞ்சு பீர்க்கங்காய் - 300 கிராம்
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 1
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4
* மிளகாய் தூள் - 1
* மல்லித் தூள் - 1
* சீரகத் தூள் - 1
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* தயிர் - 3/4 கப்
* தண்ணீர் - 1 கப்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* கசூரி மெத்தி - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் பீர்க்கங்காயின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பிரியாண இலை, கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய்
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு
தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள்
மற்றும் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காயை சேர்த்து நன்கு
கிளறி, 3-4 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் தயிரை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, கரம்
மசாலாவைத் தூவி நன்கு கலந்து விட்டு, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* இறுதியாக கசூரி மெத்தியை சேர்த்து கிளறி, கொத்தமல்லியைத் தூவி
கலந்து இறக்கினால், சுவையான பீர்க்கங்காய் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications
