Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
தோசைக்கு வேர்க்கடலை சட்னி அரைக்கும் போது இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்!
Peanut Tomato Chutney Recipe in Tamil: பெரும்பாலான தென்னிந்திய வீடுகளில் காலை அல்லது மாலை உணவாக இருப்பது இட்லி, தோசைதான். அதற்கு என்ன சைடிஷ் அல்லது சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? பொதுவாக இட்லி, தோசைக்கு சரியான சைடிஷாக இருப்பது சட்னி வகைகள்தான். ஈஸியான மற்றும் சுவையான சட்னிகளில் முதலிடத்தில் இருப்பது தேங்காய் சட்னிதான்.
தினமும் ஒரே மாதிரியான சட்னி செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் உங்கள் வீட்டில் வேர்க்கடலை உள்ளதா? பொதுவாக வேர்க்கடலை சட்னியை தேங்காய் வைத்துதான் செய்வோம். ஆனால் தேங்காய்க்கு பதில் தக்காளி வைத்து அரைத்தால் அந்த சட்னியின் சுவை வேற லெவலில் இருக்கும்.

இந்த தக்காளி வேர்க்கடலை சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சற்று வித்தியாசமான சுவையுடனும் இருக்கும். முக்கியமாக இந்த சட்னியை செய்தால், 2 தோசை சாப்பிடுபவர்கள் நான்கு தோசையாக சாப்பிடுவார்கள். இந்த சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி உப்புமா, பொங்கல் போன்றவற்றுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். இந்த சூப்பரான சட்னியை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- வறுத்த வேர்க்கடலை - 1/4 கப்
- உளுந்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
- வர மிளகாய் - 2
- தக்காளி - 1
- பச்சை மிளகாய் - 2
- புளி - சிறிய துண்டு
- சீரக விதைகள் - 1/4 டீஸ்பூன்
- பூண்டு பல் - 5
- கறிவேப்பிலை - 1 கொத்து
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - 1 டீஸ்பூன்
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
செய்முறை:
- வேர்க்கடலையை எண்ணெய் சேர்க்காமல் 2 நிமிடங்கள் வறுக்கவும், கடலையை வறுத்தபின் கடலையை தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, உளுத்தம்பருப்பு, சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய், சீரகம், பூண்டு, கறிவேப்பிலை மற்றும் வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை சேர்க்கவும்.
- உளுத்தம்பருப்பு பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அவற்றை எடுத்து ஆறவிடவும்.
- பின்னர் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு குலையும் வரை வதக்கவும்.
- பின்னர் ஆற வைத்த பொருளுடன் தக்காளியை சேர்த்து மிக்ஸி ஜாருக்கு மாற்றவும்.
- இந்த கலவையை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.
- இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி வைக்கவும்.
- ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கறிவேப்பில்லை, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு இறுதியாக ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து தாளித்து சட்னி மீது ஊற்றவும்.
- சூப்பரான வேர்க்கடலை தக்காளி சட்னி ரெடி. இது இட்லி, தோசையுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications