Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சர்க்கரை, எண்ணெய் எதுவும் சேர்க்காமல் ஈவ்னிங் டைம்-ல சூப்பர் ஸ்வீட் செய்யலாம் தெரியுமா?
Peanut Sweet Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிட கேட்கிறார்களா? எப்போதும் எண்ணெயில் பொரித்த ஸ்நாக்ஸை செய்து கொடுக்காமல், சற்று சத்தான மற்றும் ஆவியில் வேக வைத்து செய்யக்கூடிய ஒரு ஸ்வீட் செய்து கொடுங்கள். இந்த ஸ்வீட் வேர்க்கடலை, பொட்டுக்கடலை சேர்த்து செய்வதால், இதன் சுவை மிகவும் அற்புதமாக இருக்கும். மேலும் இந்த ஸ்வீட் செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.
உங்களுக்கு வேர்க்கடலை ஸ்வீட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை ஸ்வீட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* நெய் - 2 டீஸ்பூன்
* ரவை - 1 கப்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
அரைப்பதற்கு...
* வேர்க்கடலை - 1/4 கப்
* பொட்டுக்கடலை - 1/4 கப்
* ஏலக்காய் - 3
வெல்ல கரைசலுக்கு...
* வெல்லம் - 1 கப்
* தண்ணீர் - 2 கப்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை மற்றும்
ஏலக்காய் சேர்த்து, சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் 1 கப் பொடித்த வெல்லத்தைப் போட்டு,
அத்துடன் 2 கப் நீரை ஊற்றி, வெல்லத்தை கரைய விட வேண்டும். வெல்லம்
கரைந்ததும், அதை இறக்கி வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் நெய்
சேர்த்து சூடானதும், ரவை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க
வேண்டும்.
* பிறகு அதில் தயாரித்து வைத்துள்ள வெல்ல நீரை சேர்த்து, 2 நிமிடம்
மிதமான தீயில் வைத்து நீர் வற்றும் வரை நன்கு கிளறி விட வேண்டும்.
* நீர் வற்றியதும் அடுப்பை அணைத்துவிட்டு இறக்கி, கை பொறுக்கும்
சூட்டிற்கு ஆற வைக்க வேண்டும்.
* பின் கையில் நெய் தடவி, ஆற வைத்த கலவையை சிறிது சிறிதாக எடுத்து
உருண்டையாக பிடித்து, சற்று தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு இட்லி தட்டில் நெய் தடவி, செய்து வைத்துள்ளதை இட்லி தட்டில்
அடுக்கி வைத்து, இட்லி பாத்திரத்தில் வைத்து, 8 நிமிடம் வேக வைத்து
எடுத்தால், சுவையான வேர்க்கடலை ஸ்வீட் தயார்.
Image Courtesy: Akshaya.com



Click it and Unblock the Notifications