Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
எக்ஸாம் டைம்-ல பிள்ளைகளுக்கு தினமும் இந்த 1 உருண்டையை குடுங்க.. ஞாபக சக்தி அதிகரிக்கும்..
Peanut Sesame Laddu Recipe In Tamil: தற்போது தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கிறது. உங்கள் பிள்ளைகள் படித்த பாடம் மறக்காமல், சிறப்பாக தேர்வு எழுத வேண்டுமானால், அவர்களின் உணவில் முதலில் கவனம் செலுத்துங்கள். அதுவும் உங்கள் பிள்ளைகள் படித்ததை எல்லாம் மறந்துவிடுகிறார்களா? அப்படியானால் அவர்களுக்கு வேர்க்கடலை மற்றும் எள்ளு கொண்டு தயாரிக்கப்படும் லட்டு ரெசிபியை தயாரித்து, தினமும் காலையில் ஒரு லட்டுவை சாப்பிட கொடுங்கள்.
இந்த லட்டு ஞாபக சக்தியை அதிகரிப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் இதில் கால்சியம், மக்னீசியம், நார்ச்சத்து போன்ற சத்துக்களும் உள்ளன. இந்த லட்டுவை குழந்தைகள் மட்டுமின்றி பெரியோர்களும் சாப்பிடலாம்.

உங்களுக்கு வேர்க்கடலை எள்ளு லட்டுவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை எள்ளு லட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை வேர்க்கடலை - 1 கப்
* எள்ளு விதைகள் - 1 கப்
* உலர் திராட்சை - 2 டேபிள் ஸ்பூன்
* பொடித்த வெல்லம் - 1 1/2 கப்
* தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1 சிட்டிகை
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பச்சை வேர்க்கடலையை
சேர்த்து, மிதமான தீயில் வைத்து, நன்கு வறுத்து இறக்கி, ஒரு தட்டில்
போட்டு குளிர வைக்க வேண்டும்.
* வேர்க்கடலை குளிர்ந்த பின் அதன் தோலை நீக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் எள்ளு விதைகளை சேர்த்து நன்கு வறுத்து, அதையும்
ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை மற்றும்
எள்ளு விதைகளை சேர்த்து, அத்துடன் உலர் திராட்சையையும் சேர்த்து,
சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொடித்த வெல்லத்தை
சேர்த்து, அத்துடன் சிறிது நீரை ஊற்றி, வெல்லம் கரைந்த பின், வெல்ல
நீரை வடிகட்டிவிட்டு மீண்டும் வாணலியில் ஊற்றி அடுப்பில் வைத்து, சிறு
கம்பி பதத்திற்கு வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* வெல்ல நீர் சிறு கம்பி பதத்திற்கு வந்ததும், அடுப்பை அணைத்துவிட
வேண்டும்.
* பின் அதில் பொடித்த வேர்க்கடலையை கலவையை சேர்த்து, அத்துடன் 1
சிட்டிகை உப்பு மற்றும் 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு
கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் நெய்யை சேர்த்து கிளறி, கை பொறுக்கும் சூட்டிற்கு வரும்
வரை குளிர வைக்க வேண்டும்.
* இறுதியாக கையில் நெய்யை தடவி, இந்த கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து
லட்டு போன்று உருட்டி தட்டில் வைத்துக் கொண்டால், வேர்க்கடலை எள்ளு
லட்டு தயார். இந்த வேர்க்கடலை எள்ளு லட்டு 10 நாட்கள் ஆனாலும்
கெட்டுப் போகாமல் நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications