Latest Updates
-
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
பாம்பே ஸ்டைல் பட்டாணி குருமா மசாலா ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்...!
Pattani Masala Recipe in Tamil: பட்டாணி அனைவருக்கும் பிடித்த ஒரு சுவையான பொருளாகும். பட்டாணி சுவையான பொருள் என்பதையும் தாண்டி அதில் புரோட்டின் அதிகமிருப்பதால் ஆரோக்கியமான பொருளாகவும் இருக்கிறது. வீட்டில் சப்பாத்தி செய்ய முடிவெடுத்துவிட்டால் அதற்கான முதல் சைடிஷாக அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது பட்டாணிக் குருமாதான்.
வழக்கமான பட்டாணி குருமா போல அல்லாமல் இந்த பதிவில் வித்தியாசமான மற்றும் வேற லெவல் சுவையில் இருக்கும் பட்டாணிக் குருமாவை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம். இந்த பட்டாணி மசாலா வடநாட்டு ஸ்டைலில் செய்யக்கூடியது மற்றும் வித்தியாசமான சுவையுடையது. இந்த பட்டாணி மசாலா ஹோட்டல்களில் பரிமாறப்படுவதை விட அருமையான சுவையில் இருக்கும்.

தேவையானப் பொருட்கள்:
- 1 கப் பட்டாணி
- 2 நறுக்கிய பெரிய வெங்காயம்
- 3 நறுக்கிய தக்காளி
- 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- ¼ ஸ்பூன் வெந்தயம்
- ¼ ஸ்பூன் சீரகம்
- 2 ஸ்பூன் மிளகாய் தூள்
- 2 ஸ்பூன் மல்லித்தூள்
- அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
- ½ ஸ்பூன் கரம் மசாலா
- 2 ஸ்பூன் கொத்தமல்லி இலைகள் நறுக்கியது
- ¼ டீஸ்பூன் சர்க்கரை
- 1 ஸ்பூன் வெண்ணெய்
- 1 ஸ்பூன் எண்ணெய்
- உப்பு தேவையான அளவு
தாளிக்க:
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 இலவங்கப்பட்டை
- 1 ஏலக்காய்
- 2 கிராம்பு
செய்முறை:
- முதலில் வெந்தயம் மற்றும் சீரகத்தை ஒரு பாத்திரத்தில் சில துளிகள் எண்ணெயில் பொன்னிறமாக வறுக்கவும்.
- பின்னர் இதை பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு பிரஷர் குக்கரில் 1 ஸ்பூன் எண்ணெயைச் சேர்த்து, முதலில் இஞ்சி, பூண்டு சேர்க்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதங்கியவுடன் ஆறவைத்து அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் அதே குக்கரில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கி,தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் அரைத்த வெங்காய தக்காளியைச் சேர்த்து மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா மற்றும் மஞ்சள் தூள் போன்றவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.
- மிதமான தீயில் வைத்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
- பச்சைப் பட்டாணி மற்றும் போதுமான தண்ணீர் சேர்க்கவும்.
- இறுதியாக தேவையான அளவு உப்பு மற்றும் கால் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து குக்கரை மூடவும்.
- மிதமான தீயில் ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- விசில் அடங்கியதும் குக்கரை திறந்து அதில் அரைத்து வைத்து சீரகப்பொடியை சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறுதியாக வெண்ணெய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைத்தால் சூப்பரான பட்டாணி மசாலா ரெடி!



Click it and Unblock the Notifications