Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
3/4 கப் கடலை மாவும், 1/2 கப் அரிசி மாவும் இருக்கா? அப்ப இந்த பட்டணம் பக்கோடாவை செஞ்சு சாப்பிடுங்க...
Pattanam Pakoda Recipe In Tamil: தற்போது மழையின் காரணமாக காலநிலை மிகவும் குளிர்ச்சியாக உள்ளது. இம்மாதிரியான சூழ்நிலையில் பலருக்கும் மாலை வேளையில் நன்கு சூடாகவும், மொறுமொறுப்பாகவும் ஏதாவது சாப்பிடத் தோன்றும். பெரும்பாலானோர் வெங்காய பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி, உருளைக்கிழங்கு பஜ்ஜி, போண்டா என்று செய்து சாப்பிடுவார்கள்.
ஆனால் இப்படி எப்போதும் ஒரே மாதிரி பஜ்ஜி, போண்டாவை செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் அடுத்த முறை பட்டணம் பக்கோடா என்று அழைக்கப்படும் மெது பக்கோடாவை செய்து சாப்பிடுங்கள். இந்த பட்டணம் பக்கோடா செய்வது மிகவும் சுலபம். மேலும் இது குறைவான பொருட்களைக் கொண்டு செய்யக்கூடிய ஒரு ருசியான பக்கோடா.

இந்த பட்டணம் பக்கோடா பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் சாப்பிடக்கூடிய வகையில் ருசியாக இருக்கும். உங்களுக்கு பட்டணம் பக்கோடாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பட்டணம் பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
* கடலை மாவு - 3/4 கப்
* பொட்டுக்கடலை மாவு - 1/2 கப்
* அரிசி மாவு - 1/2 கப்
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 2 கப் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் நெய்யை ஊற்றி, அத்துடன்
பேக்கிங் சோடாவை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, தேவையான அளவு
உப்பு ஆகியவற்றை சேர்த்து கையால் நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சோம்பு ஆகியவற்றை மிக்சர்
ஜாரில் போட்டு ஒருமுறை அடித்து, அதையும் மாவுடன் சேர்த்து, அத்துடன்
கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை சேர்க்க வேண்டும்.
* பின்பு வெங்காயம், பெருங்காயத் தூள், மிளகாய் தூள் சேர்த்து கையால்
நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நீரை சேர்த்து, ஓரளவு கெட்டியாக பிசைந்து
கொள்ள வேண்டும்.
* அடுத்து, பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், மிதமான தீயில் வைத்து, உருண்டைகளைப் போட்டு
பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பட்டணம் பக்கோடா அல்லது மெது
பக்கோடா தயார்.
Image Courtesy: madrassamayal



Click it and Unblock the Notifications