Latest Updates
-
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
Easy Pasta Salad : பாஸ்தா சாலட்
உங்கள் வீட்டில் உள்ளோர் சாலட்டை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் ஒரு உங்கள் வீட்டில் பாஸ்தா இருந்தால், அதைக் கொண்டு பாஸ்தா சாலட் செய்து கொடுங்கள். இந்த பாஸ்தா சாலட் செய்வது மிகவும் சுலபம்.
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் பசிக்குதுன்னு சொல்றாங்களா? அவங்களுக்கு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ஏதேனும் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் சாலட்டை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் ஒரு உங்கள் வீட்டில் பாஸ்தா இருந்தால், அதைக் கொண்டு பாஸ்தா சாலட் செய்து கொடுங்கள். இந்த பாஸ்தா சாலட் செய்வது மிகவும் சுலபம்.

உங்களுக்கு பாஸ்தா சாலட் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாஸ்தா சாலட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாஸ்தா - 1 1/2 கப்
* தண்ணீர் - 4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - சில துளிகள்
சாலட் டிரஸ்ஸிங்...
* எண்ணெய் - 1/4 கப்
* வினிகர் - 1 டீஸ்பூன்
* மயோனைஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* உலர்ந்த கற்பூரவள்ளி - 1 டீஸ்பூன்
* சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
* பூண்டு பொடி - 1 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
காய்கறிகள்...
* வெங்காயம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* குடைமிளகாய் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் பாஸ்தாவை வேக வைப்பதற்கு தேவையான அளவு நீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வையுங்கள்.
* நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சிறிது உப்பு மற்றும் சில துளிகள் எண்ணெய் சேர்த்து, அதன்பின் பாஸ்தாவை சேர்த்து 10 நிமிடம் வேக வையுங்கள்.
* பாஸ்தா நன்கு வெந்துவிட்டதா என்று அவ்வப்போது சோதித்துக் கொள்ளுங்கள். பாஸ்தா நன்கு வெந்துவிட்டால், ஸ்பூன் கொண்டு வெட்டும் போது பாஸ்தா எளிதில் துண்டாகும்.
* பின் அடுப்பை அணைத்து நீரை வடிகட்டி விட்டு, குளிர்ந்த நீரால் ஒருமுறை பாஸ்தாவை அலசி தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
* பின்னர் ஒரு பெரிய பௌலில் ஆலிவ் அயில் மற்றும் மயோனைஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் உலர்ந்த கற்பூரவள்ளி, சில்லி ப்ளேக்ஸ், பூண்டு பொடி, மிளகுத் தூள், சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் காய்கறிகளை சேர்த்து நன்கு கிளறினால், பாஸ்தா சாலட் தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications