Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
எப்பவும் சாம்பார் செஞ்சு போரடிச்சுடுச்சா? அப்ப ஒருவாட்டி வித்தியாசமா பருப்பு வத்தக்குழம்பு செய்யுங்க..
Paruppu Vathakuzhambu Recipe In Tamil: எப்போதும் சாம்பார், புளிக்குழம்பு என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான, அதே சமயம் வாய்க்கு ருசியான ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் ஒருமுறை பருப்பு வத்தக்குழம்பு செய்து பாருங்கள்.
இந்த குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, தோசையுடனும் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது சட்டென்று செய்யக்கூடிய வகையில் ஈஸியான செய்முறையைக் கொண்டது. ஒருமுறை இந்த குழம்பை வீட்டில் செய்தால், உங்கள் வீட்டில் உள்ளோர் அடிக்கடி இந்த குழம்பை செய்ய சொல்லி கேட்பார்கள். அந்த அளவில் இந்த குழம்பு ருசியாக இருக்கும்.

உங்களுக்கு பருப்பு வத்தக்குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பருப்பு வத்தக்குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 5
* துவரம் பருப்பு - 150 கிராம்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* பூண்டு - 3 பல்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* புளி - சிறிய துண்டு
* தண்ணீர் - 3/4 லிட்டர்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, மிளகு, சீரகம், வரமிளகாய் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் துவரம் பருப்பை நீரில் 2 முறை கழுவிவிட்டு சேர்த்து,
அத்துடன் பெருங்காயத் தூள் சேர்த்து, நல்ல மணம் வரும் வரை வறுக்க
வேண்டும்.
* பிறகு அதில் 3 பல் பூண்டு, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் புளியை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் 3/4 லிட்டர் நீரை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து
கலந்து, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் உள்ள நீரை ஒரு கிண்ணத்தில்
வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அந்த பருப்புடன், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, மத்து
கொண்டு நன்கு மசித்து விட வேண்டும்.
* இறுதியாக அதில் வடிகட்டி வைத்துள்ள நீரை ஊற்றி கிளறினால், சுவையான
பருப்பு வத்தக்குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications