Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
அடுத்தமுறை பருப்பு குழம்பை இந்த பக்குவத்துல வையுங்க.. குண்டா சோறு காலியாயிடும்...
Paruppu Kuzhambu Recipe In Tamil: ஒவ்வொரு வீட்டிலும் ஒரு வாரத்தில் நிச்சயம் 2 முறை சாம்பார் செய்துவிடுவோம். ஆனால் இப்படி சாம்பார் செய்யும் போது ஒரே மாதிரி செய்தால் அது ஒரு கட்டத்தில் போரடித்துவிடும். உங்களுக்கும் அப்படி சாம்பார் வைத்து போரடித்துவிட்டால், அடுத்தமுறை சாம்பாருக்கு பதிலாக பருப்பு குழம்பு செய்யுங்கள்.
இந்த பருப்பு குழம்பு சற்று வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, நல்ல மணத்துடன் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இப்படி குழம்பு செய்யும் போது குண்டா சோறும் டக்கென்று காலியாகிவிடும்.

உங்களுக்கு பருப்பு குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பருப்பு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துவரம் பருப்பு - 150 கிராம் அல்லது 1 கப்
* பூண்டு - 8 பல்
* சின்ன வெங்காயம் - 15 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* மிளகு - 10
* மல்லி விதை - 1 டீஸ்பூன் (ஒன்றிரண்டாக தட்டியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 2 கப் + தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* தேங்காய் - சிறிது
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* சின்ன வெங்காயம் - 2
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸபூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 2 கப் (தட்டியது)
* சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் துவரம் பருப்பை நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, பின் நன்கு
2 முறை கழுவிவிட்டு நீரை வடித்துவிட்டு, குக்கரில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் பூண்டு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், தக்காளி,
சீரகம், மிளகு, மல்லி விதை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், எண்ணெய்
மற்றும் 2 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 2-3 விசில்
விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் சிறிது தேங்காயை எடுத்து, அத்துடன் சீரகம்,
கறிவேப்பிலை மற்றும் 2 சின்ன வெங்காயத்தை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி, சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் குக்கரைத் திறந்து கரண்டியால் ஒருமுறை கிளறி விட்டு, குக்கரை
மீண்டும் அடுப்பில் வைத்து, ஒரு கொதி வந்ததும், அரைத்த தேங்காய்
விழுதை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, ஒரு கொதி விட
வேண்டும்.
* அதற்குள் மற்றொரு அடுப்பில் தாளிப்பதற்கு ஒரு வாணலியை வைத்து, அதில்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் தட்டி வைத்துள்ள பூண்டு
மற்றும் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி,
கொதித்து கொண்டிருக்கும் குழம்புடன் சேர்த்து, ஒரு கொதி விட்டு
இறக்கினால், சுவையான பருப்பு குழம்பு தயார்.
Image Courtesy: SIMPLY SAMAYAL



Click it and Unblock the Notifications











