Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
பன்னீர் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல 10 நிமிடத்தில் இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. ருசியானதும்.. சத்தானதும் கூட...
Paneer Nuggets Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் பிள்ளைகள் சாப்பிட ஸ்நாக்ஸ் ஏதாவது கேட்கிறார்களா? அப்போது உங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலான ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் பிள்ளைகளுக்கு பன்னீர் பிடிக்குமா? அப்படியானால் உங்கள் வீட்டில் பன்னீர் இருந்தால், அந்த பன்னீரைக் கொண்டு நக்கட்ஸ் செய்து கொடுங்கள்.
இந்த பன்னீர் நக்கட்ஸ் செய்வதற்கு 4-5 பொருட்கள் இருந்தாலே போதும். 10 நிமிடத்தில் டக்கென்று செய்துவிடலாம். அதுவும் தற்போது தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் பிள்ளைகளின் உணவில் பன்னீரை சேர்ப்பது மிகவும் நல்லது. இது அவர்களின் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

உங்களுக்கு பன்னீர் நக்கட்ஸை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் நக்கட்ஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* பன்னீர் - 200 கிராம்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலை மாவை சேர்த்து
மிதமான தீயில் வைத்து நன்கு 2 நிமிடம் வறுக்க வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா ஆகியவற்றை
சேர்த்து லேசாக வறுக்க வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் 200 கிராம் பன்னீரை துருவிக் கொள்ள
வேண்டும்.
* பிறகு துருவிய பன்னீருடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி,
சுவைக்கேற்ப உப்பு மற்றும் வறுத்து வைத்துள்ள கடலை மாவை சேர்த்து
கைகளால் நன்கு அழுத்தி பிசைய வேண்டும்.
* பின்னர் பிசைந்த கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அழுத்தி
உருண்டைகளாக உருட்டி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், உருண்டைகளை சேர்த்து, பொன்னிறமாக பொரித்து
எடுத்தால், சுவையான பன்னீர் நக்கட்ஸ் தயார்.
குறிப்பு:
ஒருவேளை உங்களுக்கு மேல் பகுதி மொறுமொறுவென்று இருக்க வேண்டுமானால், பிரட் தூளில் பன்னீர் உருண்டைகளைப் போட்டு உருட்டி, அதன் பின் எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கலாம். இது கடைகளில் கொடுப்பது போன்ற சுவையிலும், தோற்றத்திலும் இருக்கும்.



Click it and Unblock the Notifications