Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
பன்னீர் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி ஒருடைம் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்...
Paneer Hyderabadi Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி பன்னீர் செய்வீர்களா? அதுவும் சப்பாத்தி என்றால் பெரும்பாலும் பன்னீர் சைடு டிஷ்ஷை தான் செய்வீர்களா? ஆனால் எப்போதும் ஒரே சுவையில் தான் பன்னீர் சைடு டிஷ் செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை சற்று வித்தியாசமான சுவையில் செய்யுங்கள்.
அதுவும் ஹைதராபாதி பன்னீர் கிரேவி செய்யுங்கள். இந்த பன்னீர் கிரேவி சப்பாத்தி, புலாவ், நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த கிரேவி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். ஒருமுறை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.

உங்களுக்கு பன்னீர் ஹைதராபாதி கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் ஹைதராபாதி கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* பூண்டு - 4 பல்
* இஞ்சி - சிறிய துண்டு
* கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* புதினா - சிறிது
* தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 1
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா -1/2 டீஸ்பூன்
* மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பிரஷ் க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து
பொன்னிறமாக ப்ரை செய்து
தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு
வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில், வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன்
கொத்தமல்லி, புதினா, கசூரி மெத்தி மற்றும் தயிர் சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் மல்லித் தூள், கரம் மசாலா, மிளகுத் தூள், காஷ்மீரி
மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு
5 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் பிரஷ் க்ரீம்மை சேர்த்து கிளறி, கிரேவிக்கு தேவையான
அளவு நீரை ஊற்றி கிளறி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* கிரேவி கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ப்ரை செய்து வைத்துள்ள பன்னீர்
துண்டுகளை சேர்த்து கிளறி, 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து,
கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், பன்னீர் ஹைதராபாதி கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications