Latest Updates
-
இன்றைய ராசிபலன் 17 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கூரையை பிச்சுட்டு கொட்டப்போகுதாம் -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 3 ராசிக்கு தொழில் ரீதியா அதிர்ஷ்டமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கேரட்டும், ஜவ்வரிசியும் இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் செய்யுங்க.. பிள்ளைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
Nag Panchami 2026: நாக பஞ்சமியில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
காரசாரமான சிக்கன் ஈரல் வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்த 7 அறிகுறிகள் அடிக்கடி தெரியுதா? அப்ப அது குடல்வால் புற்றுநோயின் அறிகுறியா இருக்கலாம்.. உஷார்.. -
ஆகஸ்ட் 19-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..! -
கவுண்டம்பாளையம் சிக்கன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனச்சுமை அதிகரிக்கப்போகுதாம் -
புதன்-குருபகவான் இணைப்பால் சூப்பர் ஸ்டாரா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
பாலக்கீரையை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம ஒருமுறை இப்படி தொக்கு செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்...
Palak Keerai Thokku Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி கீரை வாங்கி சமைப்பீர்களா? எப்போது கீரையை வாங்கினாலும் அதை கடையல் அல்லது பொரியல் தான் செய்வீர்களா? அடுத்தமுறை பாலக்கீரையை வாங்கினால், அதை கடைந்து சாப்பிடாமல், தொக்கு செய்து சாப்பிடுங்கள். இந்த பாலக்கீரை தொக்கு சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.
உங்களுக்கு பாலக்கீரை தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாலக்கீரை தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* பாலக்கீரை - 1 கட்டு
* பெரிய வெங்காயம் - 3 (நறுக்கியது)
* பூண்டு - 30 பல் (தோலுரித்தது)
* மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பூண்டு - 5 பல் (தட்டியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கறிவேப்பிலை . சிறிது
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் பாலக்கீரையை நீரில் கழுவிவிட்டு, அதை பொடியாக நறுக்கி
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வெங்காயம், பூண்டு, மிளகாய் தூள் சேர்த்து
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வெந்தயம், சீரகம், வரமிளகாய் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் தட்டி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு தூவி சிறிது நீரை ஊற்றி நன்கு கிளறி 2 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* பிறகு அதில் கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மல்லித் தூள், சீரகத் தூள்
சேர்த்து கிளறி மிதமான தீயில் வைத்து, மூடி வைத்து பச்சை வாசனை போய்
எண்ணெய் பிரியும் வரை வேக வைக்க வேண்டும். முக்கியமாக அவ்வப்போது
கிளறி விட வேண்டும்.
* இறுதியாக அதில் நறுக்கி வைத்துள்ள கீரையை சேர்த்து நன்கு கிளறி,
குறைவான தீயில் வைத்து, 5 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.
* கீரையின் நிறம் மாறியதும், அடுப்பை அணைத்துவிட்டால், சுவையான பாலக்
கீரை தொக்கு தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications